பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும், இஸ்லாமிய ஆய்வாளரும்,
இலங்கையின் தலைசிறந்த இஸ்லாமிய கல்விமானுமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தென்கிழக்கு சமூகத்தினால் எதிர்வரும்
2014.01.05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு சாய்ந்தமருது
பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தென்கிழக்கு உலமாக்கள், பல்கலைக்கழக, கல்விக்கல்லூரி
விரிவுரையாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உயர்
அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் பற்றிய சிறப்புரையும் நிகழ்த்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடு
தென்கிழக்கு சமூகம்