BREAKING NEWS

மனைவியின் கன்னித்தன்மையை சந்தேகித்த கணவனுக்கு கசையடி



மனைவியின் கன்னித் தன்மை குறித்து சந்தேகம் வெளியிட்டு அதனை நிரூபிக்கத் தவறிய கணவருக்கு சவூதி அரேபியாவில் கசையடி தண்டனையாக வழங்கப்பட் டுள்ளது.
சவூதியின் மக்கா நகர நீதிபதி நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்காக குறித்த நபருக்கு 20 கசையடி தண்டனையாக வழங்கியதாக சவூதியின் செய்தி இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
யெமன் நாட்டவர் ஒருவர் தனது மனைவி தன்னை திருமணம் செய்யும் முன்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்றும் அவர் கன்னித்தன்மை இழந்தவர் என்றும் மனைவியின் தந்தை மற்றும் உறவினர்கள் முன் குற்றம் சுமத்தியுள்ளார். 
இதனை அடுத்து தனது கெளரவம் மற்றும் நற்பெயரை நிரூபிக்க மனைவி நீதிமன்றம் சென்றதாக அந்த செய்தியில் கூறப் பட்டுள்ளது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar