ஆசிரியை, தமிழ்கூறும் நல்லுலகறிந்த நாடகக் கலைஞர், வானொலியின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அறிவிப்பாளர், எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்ட சகோதரி புர்க்கான் பீ இப்திகார் எழுதிய “தெளிந்த முடிவு” என்ற நாவலுக்குத் தேசிய ரீதியான முதற்பரிசு கிடைத்துள்ளது. ஹொரண பிரதேச சபையால் நடத்தப்பட்ட சரத்சந்திர ஜயக்கொடி ஞாபகார்த்த நாவல் போட்டியில் அவர் முதற் பரிசை வென்றுள்ளார். சகோதரி புர்க்கான் பீ இப்திகார் “மாதர் மஜ்லிஸ்” என்ற நிகழ்ச்சியை இல. ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மிக நீண்டகாலம் மிகத் திறம்படத் தொகுத்தும் தயாரித்தும் வழங்கியவர். ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். கடல் கடந்தும் பலநூறு நேயர்களைக் கொண்ட ஒலிபரப்பாளரான புர்க்கான் பீ அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!
புர்க்கான் பீ இப்திகார் எழுதிய “தெளிந்த முடிவு” என்ற நாவலுக்குத் தேசிய ரீதியான முதற்பரிசு
Posted by aljazeeralanka.com on January 18, 2014 in book | Comments : 0
