கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மிலும் ஜ.தே.கட்சி தேசிய அமைப்பாளர் தயா கமகேயும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக
கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சியின பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமிசிங்கவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் என சிங்கள இணையத்தளம் செய்தி வெளியீட்டுள்ளது.
ஸ்ரீகொத்தவில் நடைபெற்ற பொதுபல சேனா ஆர்ப்பாட்டத்தின் போது கட்சியின் அங்கீகாரமின்றி பொதுபல சேனா பிக்குகளிடம் தயா கமகே மண்னிப்பு கேட்டமை, அத்துடன் தயா கமகே வியாபாரம் சம்பந்தமாக பாதுகாப்ப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவுடன் தொடர்புபட்டு தனது வியாபார நடவடிக்கைகளை சீர் செய்தமை போன்றவற்றை அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் தயா கமகே, கிழக்கு மாகாண சபையில் இருந்து விலகி கொழும்பில் மேல் மாகணத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
அத்துடன் கொழும்பு மாநகர சபையின் முதல்வர் முசம்மிலின் மனைவி பெரோசா முசம்மில் கொழும்பு மாவட்டத்தில் மேல் மாகாண சபை தேர்தலில் குதிப்பதற்கு ஆயத்தமாக உள்ளார்.
இவருக்கு தேர்தலில் போட்டியிட ஜ.தே. கட்சியில் சீட் தர முடியாது என ஜ.தே.கட்சி கூறி வருகின்றமை போன்ற காரணங்களை காட்டியே இவர் அரசில் சேரவுள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் மேலும் குறிப்பட்டுள்ளது.