அரசாங்கம் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் கவனயீனமாக செயற்படின் உலகளாவிய முதலாளித்துவ நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படும் நிலை ஏற்படுமென நவ
சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன எச்சரித்தார்.
முதலாளித்துவ நாடுகள் தேசிய பிரச்சினைகளில் தலையிடாவிடினும் சர்வாதிகார ஆட்சி மற்றும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடுகள் போன்று உலக முதலாளித்துவ நாடுகளும் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகார பகிர்வினூடாக நாட்டை ஐக்கியப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் சிறுபான்மையினத்தவர் விடயத்தில் அரசாங்கம் மிகவும் மோசமாக செயற்பட்டு வருகிறது. யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்வையும் முன்வைக்கவில்லை. அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்கள் தொடர்பில் ஏனோ தானோ என செயற்படுகிறது என்றார்.