ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தாம் இந்த அழைப்பினை விடுப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளு மன்றத் தெரிவுக் குழுவில் முன்வைக்கும் கருத்துகள் மூலம்
சிறந்த சுபீட்சமான எதிர்கால மொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்றைய தினம் தெல்லிப்பழை புற்று நோய் ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அன்பாகவும் கெளரவமாகவும் மேற்படி வேண்டுகோளை விடுப்பதாகவும் தெரிவித்தார்.தேசியப் பிரச்சினையின் தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வடக்கு மாகாண சபை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
2014 ஆம் வருடத்திற்காக அரசாங்கம் 157 பில்லியன் ரூபாவை சுகாதார துறைக்காக ஒதுக்கியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின்னர் இந்தளவு தொகை ஒதுக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
யுத்தத்தின் பின்னர் முழு நாட்டிலும் சுகாதாரத்துறைக்கு பாரிய நிதி செலவிடப்பட்டது. எனினும் வடக்கிற்கே ஆகக் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.