ஐ. ஏ. காதிர் கான்
கொழும்பு மாவட்டத்திலுள்ள 1,500 மாணவர்களுக்கான ஆங்கில மொழி கற்கை நிகழ்ச்சித் திட்டம், எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு, கொழும்பு மியூஸியஸ் கல்லூரியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளரும் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபாவின் சிந்தனையில் உருவான இந்த ஆங்கில மொழி நிகழ்ச்சித் திட்டத்தை, பைஸர் முஸ்தபா மன்றம,; லங்கா ஐ.ஓ.சீ. நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் 15 ஞாயிறு சமயப் பாடசாலைகளில் இருந்து 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட மாணவர்கள், மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பைஸர் முஸ்தபா பவுன்டேஷன் ஏற்பாட்டில் இடம்பெறும் இத்திட்டத்திம், சுமார் 6 மாத கால பாட நெறியைக் கொண்டது.
பேச்சு, இலக்கணம், எழுத்து, செவிமடுத்தல், ஆகிய 4 அம்சங்களைக் கொண்டதாக இந்நிகழ்ச்சித் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.