BREAKING NEWS

சொத்து விபரங்களை வழங்காத வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படாது


வேட்பு மனுக்களுடன் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
தனது சொத்து விபரங்களை வழங்காத வேட்பாளர்களுக்கு தேர்தல் திணைக்களத்தினூடாக வழங்கும் வேட்பாளர் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இது குறித்து கட்சி செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் கூறினார்.
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் போது
வேட்பு மனுவுடன் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களைக் கையளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார். தவறினால் தேர்தலுக்கு முன்னராவது தமது சொத்து விபரங்களை கையளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெப்ரல் அமைப்பிற்கும் தேர்தல் ஆணையாளருக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேட்பாளர்கள் சொத்து விபரம் வழங்காமை, மாகாண அமைச்சர்கள் வாகனங்களை கையளிக்காமை என்பன குறித்து ஆராயப்பட்டது.
இதுவரை ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே சொத்து விபரங்களை வழங்கியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.
வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை பொதுமக்களும் அறிவதற்காக பகிரங்கப்படுத்த வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar