
--------------------------------------------------------------------------
வருடாவருடம் கம்பன் விழாவின் போது வழங்கப்படும் முஸ்லிம் கவிஞருக்கான “மகரந்தச் சிறகு” விருது புகழ்பெற்ற இலங்கைக் கவிஞர்களில் ஒருவரான சோலைக்கிளி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களது ஏற்பாட்டில் வழங்கப்படும் இவ்விருது கடந்த வருடம் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனுக்கு வழங்கப்பட்டது. இவ்வருடம் “மகரந்தச் சிறகு” விருது பெறும் நண்பர் கவிஞர் சோலைக்கிளிக்கு எமது வாழ்த்துக்கள்!