கிண்ணியாவைச் சேர்ந்த தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மையில் கலாசார அமைச்சினால் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேடைப் பேச்சு, கவிதை, சிறுகதை, நாட்டார், கிராமியப் பாடல்கள் போன்ற துறைகளில் ஈடுபாடுகாட்டி வரும் இவர் உணர்வ+ட்டும் முத்துக்கள், தாலாட்டுப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், மாண்புறும் மாநபி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளதுடன், தேசிய மட்டங்களிலான பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பல பரிசில்களையும், சான்றிதழ்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் - ரிம்ஸா முஹம்மத்
