நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வனாத்தமுல்லயில் பேஸ்லைன் வீதியை மறித்து இன்று மாலை பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெமட்டகொட ரயில் நிலைய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பியதுடன் அவர் மீது போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.