BREAKING NEWS

இம்போட்மிரர் நிருவாகத்தினரின் ஒன்று கூடலும் இராப்போஷனமும்

திர்வரும் 14ஆம் திகதி மாலை 7 மணிக்கு இம்போட்மிரர் நிருவாகத்தினரின் ஒன்று கூடலும் இராப்போஷனமும் ஒலுவில் துறைமுகத்திற்கு முன்னாள் உள்ள இம்போட்மிரர் வளாகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வு இம்போட்மிரர் பணிப்பாளர் நாயகம் சுலைமான் எல் முனாஸ் தலைமையில் இணையத்தளத்தின் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள், இம்போட் வானொலியின் அறிவிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக அரசியல் முக்கியஷ்தர்கள் சிரேஷ்ட அறிவிப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு இரவு 12 மணிவரை இடம்பெற உள்ளதாகவும் பிரபல பாடகர்களும் கலந்து நிகழ்வை சிறப்பிக்க இருப்பதுடன் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்களும் பிரபல்யமான மூன்று செய்திகளுக்கு அதனை அனுப்பிய செய்தியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட உள்ளதாக இணையத்தின் முகாமையாளர் எம் பைஷல் இஸ்மாயில் ஊடகங்களுத்தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar