BREAKING NEWS

மனோ கணேசன் இரட்டை வேடம்.

கொழும்பில் முன்னணி தொழிலதிபர் ஒருவரின் ஏற்பாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற தனிப்பட்ட விருந்துபசார வைபவ மொன்றில் கலந்துகொண்ட பல முக்கியமான தமிழ் அரசியல் தலைவர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டிருந்த ஜனநாயக மக்கள் முன்னணி யின் தலைவர் மனோ கணேசன், அரசியல் நாகரிகம் கொண்ட, உயர்பண்பு மிக்க நற்குணமான தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனப் புகழாரம் சூட்டியுள்ளார். எந்தவொரு தனிப்பட்ட நிகழ்வானாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பரஸ்பரம் அவரும், தானும் சுகம், நலன் விசாரிப்பது மட்டுமல்லாது அரசியல் கூட அவருடன் கதைக்கலாம். அவ்வளவு பண்பானவர், நாகரிகம் தெரிந்தவர் ஜனாதிபதி என மனோ கணேசன் கூறியுள்ளார்.

அந்த விருந்துபசாரத்தில் சக அரசியல்வாதிகள் சிலர் மனோவுடன் முறைகேடாக நடந்துகொள்ள முற்பட்டபோதே அவர் தன் ஊடக நண்பர் ஒருவரிடம் இவ்வாறு கூறிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிய தாகக் கூறப்படுகிறது.
எது எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி அவர்கள் அரசியல் நாகரிகம் கொண்ட உயர் பண்பு மிக்க தலைவர் என்பதை ஒப்புக் கொண்டு, மனோ கணேசன் தெரிவித்த கருத்தினை பெரும் மகிழ்ச்சியுடன் தான் வரவேற்பதாக ஜனாதிபதியின் இந்து மத அலுவல்கள் விவகார இணைப்பாளரும், சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளருமான பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar