கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியின் பெயரை உத்தியோக பூர்வமாக சூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி சங்கரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பிரமுகர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி மாநகர சபையினை சென்றடைந்து, அங்கு ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்முனை பிரதேச செயலகத்திற்குச் சென்று- பிரதேச செயலாளர் நௌபலிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
பின்னர் தமிழ் பிரதேச செயலகத்திற்குச் சென்று நிருவாக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.