கல்முனை மாநகர சபையின் பொறியியலாளரான ஏ.எச்.ஜெளஸி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் கடமை உணர்வுடன் கடமையாற்றி வந்த இவரை இடமாற்றுவதற்காக கல்முனை மாநகர சபை வழங்கிய அனுமதியின் பேரிலேயே இவர் இடமற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வருடாந்த இடமாற்றம் என்ற அடிப்படையில்தான் இவரது இடமாற்றம் இடம்பெற்றதாக இருந்தாலும் அதனை இரத்துச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநரைக் கோரும் அதிகாரம் கல்முனை மாநரக சபைக்கு இருந்தும் அவ்வாறு எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காது அவரது இடமாற்றத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை பலரையும் அதிருப்திப்படுத்தியுள்ளது.
பல புலமைப் பரிசில்களையும் கைநழுவி விட்டு கல்முனை தொகுதி மக்களுக்காகச் சேவை செய்து வந்த கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எச்.ஜெளஸி இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அவரையும் மன உலைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் இவைகாளக இருக்கலாம்.
------------------------------------------------------------------------
1. மருதமுனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் வடிகாலமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய யுனியன் மூலம் 24 கோடி ரூபாவை முன்பு ஹரீஸ் எம்பிக்குப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் அந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தமை
2. ஹரீஸ் எம்.பியுடனான தொடர்புகளை தொடர்ந்தும் பேணி வருவது.
3. அவரிடம் காணப்பட்ட நேர்மை, திறமை. உழைப்பு ஆகயனவற்றினைப் பொறுத்துக் கொளள முடியாத எரிச்சல் தனம் ஆகியனவே அவரை இவ்வாறு இடமாற்றம் செய்வதற்காக இணக்கக் கடிதம் வழங்கியமைக்கான காரணங்கள் என எனக்குக் கிடைத்த நம்பகரமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Siddeek Kariyappar