கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெறும் போது உபாதைக்குள்ளாகி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான லஹிரு சந்தருவான் என்ற மாணவர் கடந்த 28அம் திகதி கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது வயிற்றில் உபாதை ஏற்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, குறித்த மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags: