BREAKING NEWS

ம்மிடம் எப்போதுமே இரட்டை முகம் இல்லை;


மர்ஹ¥ம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் போக்கில் அதிருப்தியுற்றதனாலேயே அதிலிருந்து நாம் வெளியேறினோம் என்று அ. இ. ம. கா. தலைவர் அமைச் சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் தமது கட்சி தேர்தலில் போட்டியிடு வதற்கு முக்கிய காரணம் இந்த மக்களின் அபிலா ஷைகளைப் பெற்றுக் கொடுப் பதற்காகவன்றி எந்த ஒரு கட்சியின் வாக்குகளைக் குறைப் பதற்காக அல்லவெனவும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தலைநகரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளின் போது தான் உயிரையும் துச்சமென மதித்து அந்த இடத்திலேயே மக்களோடு மக்களாக நின்று பிரச்சினைகளை எதிர்நோக்கினேன். கிராண்ட்பாஸ் சம் பவத்தின் போது எமது கட்சி செயற்பட்ட விதம் இதற்குப் போதிய சான்று.
நாம் அரசியலை நோக்கமாகக் கொண்டு கொழும்பு வாழ் மக்களுக்கு பணி புரியவில்லை. உண்மையான மக்கள் சேவகர்களாக நாம் இருந்தமையால்தான் எம்மைப் போட்டியிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தும் தனித்துப் போட்டியிடுகின்றோம், என கடந்த காலங்களில் சில முஸ்லிம் கட்சிகள் மார்தட்டின. இம்முறை தேர்தலில் அதனை நாம் தகர்த்தெறிந்துள்ளோம்.
நாம் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்த போதும் எம்மிடம் இரட்டை முகம் இல்லை. ஜனாதிபதியைக் கண்டால் ஒரு பேச்சு, மக்களைக் கண்டால் வேறொரு பேச்சு என்ற நிலைப்பாடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar