(எஸ்.அஷ்ரப்கான்)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் அனுசரணையோடு செக்றோ சிறிலங்கா நிறுவனத்தினால் உயர்தரம் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி நெறி செக்றோ ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவரும், சட்டத்தரணியுமான றினோஸ் கனீபா தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (02) இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுணர் லயன் லசந்த பெரேராவும், விசேட அதிதிகளாக மாவட்ட இணைப்பாளர் லயன் ரசிக்க எஸ். பிரியந்த, லயன் எஸ்.தைரியராஜா, லயன் கே.பொன்னம்பலம், லயன் வை.எஸ். ஸ்ரீ ரங்கன், ஊடகவியலாளரும், லயன் கழக அங்கத்தவருமான எம்.ஜே.எம். ஹனீபா ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் விசேட தேவையுடைய பெண் ஒருவருக்கு லயன்ஸ் கழக மாவட்ட ஆளுணர் லயன் லசந்த பெரேரா குழுவினரால் ஊன்றுகோல் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அகதியா பாடசாலை மாணவிகளால் கலாச்சார நடனமும், உள்ளுர் பாடகர்களால் இஸ்லாமிய பாடல்களும் அரங்கேறின.
இந்த தலைமைத்துவப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக லயன் ரசிக்கபெரேரா மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி பதிவாளர் சன்ஜீவ சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நடாத்தினார்கள். இந்நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது

