அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் உயர் பீட உறுப்பினராகவும் அக்கட்சி சார்பான மாகாண சபை உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் பதவி வகித்துள்ள இவர் சிறிது காலமாக அக்கட்சியில் இருந்து விலகி ஒதுங்கியிருந்து வருகின்றார்.
இந்நிலையில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் அழைப்பின் பேரில் மு.கா.வில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் நாளை (28) வெள்ளிக்கிழமை தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடமிருந்து உத்தியோகபூர்வமாக அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டத்தரணி எச்.எச்.எம்.பாயிஸ் கிண்ணியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.