மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க எம்.பி. தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் ஏழாவது தேசிய மாநாடு இன்று (02) சுகததாச உள்ளக அரங்கில் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டின்போதே புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் தலைமைத்துவத்துக்காக கே.டி.லால்காந்த, அநுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரோஹன விஜேவீரவுக்குப் பின்னர் இதுவரை காலமும் சோமவன்ச அமரசிங்க அக்கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக ரில்வின் சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
வெள்ளை கடல் ஆமைகளாக நடிகைகள்!
நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேச இடமளிக்காத அரசாங்கம் தற்பொழுது புதிய வெள்ளை கடல் ஆமைகளாக நடிகைகள் சிலரை தேர்தலில் களமிறக்கியுள்ளது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
“மக்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி பேசுவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. பிரச்சினைகள் குறித்து கண்ணை திறந்து பார்க்க மக்களுக்கு இடமளிப்பதில்லை.
மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒவ்வொன்றை கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டது போல் புதிதாக ஒவ்வொன்றை கொண்டு வருகிறது.
எத்தனோல், வரவு செலவுத் திட்டம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்ட போது வெள்ளை கடல் ஆமை பிரச்சினை கொண்டு வரப்பட்டது.
பல வாரங்கள் இந்த வெள்ளை கடல் ஆமை பற்றியே ஊடகங்கள் பேசின. இதன் மூலம் ஹெரோயின் போதைப் பொருள் கொள்கலன், விவசாயிகளின் ஓயவூதியம் இரத்துச் செய்யப்பட்ட பிரச்சினைகள் மறந்து போயின.
இந்த நிலையில், தற்பொழுது வெள்ளை கடல் ஆமைகள் தான் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட போகும் நடிகைகள் அனைவரும் இந்த நடிகைகளையே பார்த்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாளில் புதிய வெள்ளை கடல் ஆமை குறித்து பேசுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்.