(மேற்குப் பிராந்திய நிருபர் )
நீர்கொழும்பு- தளுபத்தவில் வசிக்கும் இளம் முஸ்லிம் தாயொருவர், அவரது முதலாவது பிரசவத்திலேயே மூன்று பெண் குழந்தைகளை, நீர் கொழம்பு மாவட்ட வைத்திய சாலையில் பெற்றெடுத்துள்ளார்.
நீர்கொழம்பு- தளுபத்த, தெனிய வீதி,49ஃ9 ஆம் இலக்கத்தில் வசிக்கும், பாத்திமா ரிஸானா(வயது-20) என்ற இளம் தாயே, இம் மூன்று பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
“ஹனா” (ர்யயெ) என்ற பெயருடைய முதலாவது பெண் குழந்தை ஒரு கிலோ 280 கிராம் நிறையையும், இரண்டாவது பெண் குழந்தையான ஸ{ம்றா (ணுரஅசய) ஒரு கிலோ 410 கிராம் நிறையையும், “ஸாரா” (ளுயசய) என்ற மூன்றாவது பெண் குழந்தை ஒரு கிலோ 380 கிராம் நிறையைக் கொண்டதாக இருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப் பெண் குழந்தைகளை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி புதன் கிழமை இரவு பெற்றெடுத்தாலூம் கூட, இதில் “ஸாரா” (ளுயசய) எனும் மூன்றாவது பெண் குழந்தை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி புதன்கிழமை இரவு 11.35 மணியளவில் காலமானதாக” தாய் பாத்திமா றிஸானா தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி ஓட்டுனராகவுள்ள பாத்திமா றிஸானாவின் கணவர் மொஹமட் பஸ்லான் (வயது -28) மற்றும் இவர்களது குடும்பம், குறைந்த வருமானம் மற்றும் மிகவும் கஷ்ட நிலையில் வாழ்பவர்கள் என்பதால், இவ்விரு பெண் குழந்தைகளின் பராமரிப்புச் செலவு மற்றும் எதிர் கால நலன் கருதி, வசதி படைத்தேர், “0778887146” (தந்தை) அல்லது 0754482077 (தாய்) ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளைப் புரியுமாறு, இக் குழந்தைகளின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
