*
இம்முறை உயர்தர வகுப்பு பரீட்சை பெறுபேறுகளைக் காணும் போது வட பகுதி மாணவர்களே அதிகமாகச் சித்திபெற்றுள்ளனர்.
இது குறித்து பெருமை கொள்ளவேண்டும்.
பல வருடங்கள் துயரப்பட்ட அந்தப் பிள்ளைகளுக்கு இன்று சுதந்திரமாக கல்வியைப் பெற இயலுமானதே இதற்குக் காரணமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் MOTHER ஸ்ரீலங்கா வருடாந்த பரிசளிப்பு, விருது விழாவில் ஜனாதிபதி உரையாற்றும் போது இதனைக் கூறினார். 2010 ஆம் ஆண்டில் MOTHER ஸ்ரீலங்கா கூட்டத்தில் பங்குபற்றி பேசக் கிடைத்ததை நினைவூட்டிய ஜனாதிபதி, அக்காலத்தை விட பெருமாற்றம் இன்று உருவாகி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அன்று வடக்கிலுள்ள குழந்தைகளுக்கு தெற்குக்குச் செல்ல வேண்டாமென பிரிவினைவாதிகள் கூறினர். அன்று தென் பகுதி பிள்ளைகளை வடக்குக்கு அனுப்ப இயலவில்லை. கிழக்கிலிருந்து மேற்குக்கு வர இயலவில்லை.
எமது பிள்ளைகளுக்கு வைராக்கியத்தை தலையில் இட்டனர். பிள்ளைகள் அச்சத்துடனேயே பாடசாலைக்குச் சென்றனர். ஒருவரை ஒருவர் விசுவாசம் இன்றிப் பார்த்த யுகம் இருந்தது.
தென்பகுதி பிள்ளைகளுக்கு தமிழ் கற்குமாறும் வடபகுதி பிள்ளைகளுக்கு சிங்களம் கற்குமாறும் கூறப்பட்ட போது அதனை இனத்துரோகமாகவே பார்த்தனர். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இன்று நிலைமை மாறிவிட்டது. அன்று எழுத்துக்களில் தார் பூசினர். வேறு மொழிகளில் இருந்த பலகைகளில், வாகனங்களில் தார் பூசினர்.
இன்று சகல பாடசாலைகளிலும் இரு மொழிகளைப் போதிக்கின்றனர். எமக்கு சிங்களம் படிக்க ஆசிரியர்களை அனுப்புமாறு நான் கிளிநொச்சிக்குச் சென்ற போது மாணவர்கள் கூறினர்.
தென்பகுதி சென்றால் தமிழ் ஆசிரியர்களை அனுப்புமாறு கூறுகின்றனர்.
இன்று அந்த நிலைமைக்கு நாடு மாறியுள்ளது. நாம் மொழிகளைப் பயில வேண்டும். இன்று கிராமங்களில் இருந்து திறமையான மாணவர்கள் உருவாகின்றனர்.
கல்வியில் மட்டுமின்றி மற்றைய துறைகளிலும் பிள்ளைகள் முன்னேறுகின் றனர்.
நாட்டைப் பிரிக்கும், நாட்டை அழிக்கும் தேசிய உணர்வு இல்லாத, மத உணர்வு இல்லாத, முதியோர்களை மதிக்காத, நாட்டை காட்டிக் கொடுக்கும் அமைப்புக்களுக்கு பணம் வழங்காமல் நாட்டுக்கு வேலை செய்யக்கூடிய அமைப்புக்களை அடையாளம் கண்டு ஐக்கியத்தைக் கட்டி எழுப்பக்கூடியவர்களை அடையாளம் காணுங்கள். அதனையே இன்று செய்ய வேண்டும்.
நீங்களே நாட்டை ஆளுகிaர்கள், நீங்கள் முன்மாதிரியாக அமைந்தால் நாட்டைச் கட்டி எழுப்புவது கடடிமான காரியமல்ல. தாய்நாட்டை நேசியுங்கள். அதற்காகத் தயாராகுங்கள், இது நீங்கள் பிறந்த நாடு. நீங்கள் வாழும் நாடு. நீங்கள் இறந்த பின் நல்லடக்கம் செய்யப்படப் போகும் நாடு.
MOTHER ஸ்ரீலங்கா தொடர்ந்தும் சேவைகளைப் புரிய வேண்டும். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக வேண்டும். அதற்காக நாம் சகல வசதிகளையும் வழங்குவோம். இப்படி ஜனாதிபதி தெரிவித்தார்.