BREAKING NEWS

சகோதரியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 12 வயது சிறுவன் : ஆபாசப்படம் பார்த்ததால் விபரீதம்

உல­கப்­ பி­ர­பல எக்ஸ்பொக்ஸ் வீடியோ விளை­யாட்டு உப­க­ர­ணத்தில் ஆபா­சப்­ப­டங்­களைக் கண்­டு­க­ளித்த பின்னர் 7 வயது சகோ­த­ரியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தியதாக குற்றச்சாட்டிற்குள்ளான 12 வயது சிறுவன் ஒருவன் விடு­தலை செய்­யப்­பட்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.
 
பாட­சாலை மாண­வ­னான மேற்­படி சிறுவன் (தற்­போது 13 வயது), தனது சகோ­த­ரியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை ஒப்­புக்­கொண்­டுள்ளான். நண்பன் ஒரு­வனின் வீட்­டி­லி­ருந்த எக்ஸ்பொக்ஸ் வீடியோ விளை­யாட்டு உப­க­ர­ணத்தில் ஆபா­சப்­ப­டத்தை கண்­டுக்­க­ளித்­த­தை­ய­டுத்து, கடந்த வருடம் மார்ச்­சுக்கும் மே க்கும் இடை­யி­லான காலப் பகு­தியில் தனது சகோ­த­ரியை பல தட­வைகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­யதை அவன் ஒப்­புக்­கொண்­டுள்ளான்.
 
இந்­நி­லையில் மேற்­படி வழக்கை விசா­ரித்த பிளக்பேர்ன் சிறுவர் நீதி­மன்ற நீதி­பதி, அறியாப் பரு­வத்தில் ஆபா­சப்­ப­டத்தால் தூண்­டப்­பட்டு சிறு­வனால் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றச்­செ­ய­லுக்­காக அவனை அவ­னது குடும்­பத்­தி­லி­ருந்து பிரிக்க விரும்பவில்லை என தெரி­வித்து விடுதலை செய்துள்ளார்.
 
ஆனால் அந்த சிறுவனுக்கு தனது சகோதரியிடமிருந்து பிரிந்து உறவினர் வீட்டில் வாழ உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar