ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இந்த அரசாங்கத்தில் இருந்து விலகாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக எமது முஸ்லிம் காங்கிரஸ்
முழுமையாக
பாடுபடும் என்று கிழக்கு
மாகாண
சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்
தெரிவித்தர்.
ஏறாவூர்
எக்ஸ்பிரஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும்
பேசுகையில் கூறியதாவது;
“எமது முஸ்லிம் காங்கிரஸ் எந்த
காலத்திலும் அரசாங்கத்துக்கு துரோகம்
செய்யப்
போவதில்லை. அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற நோக்கம் எமது கட்சிக்கு கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸை வெளியேற்ற வேண்டுமென்ற
எண்ணம்
அரசாங்கத்துக்கும் கிடையாது.
எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்,
முஸ்லிம்
காங்கிரஸினை தவறாக கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. மக்கள் வெறுமனே முஸ்லிம் காங்கிரஸினை விமர்சிக்க கூடாது. தற்போது அரசாங்கத்தினை பலப்படுத்துவதன் அவசியம் எழுந்துள்ளது” என்று தெரிவித்தார்.