BREAKING NEWS

தேர்தல் காலத்தில் மட்டுமே சிலர் வீரவசனம்; சலுகைகளுக்காக அடிபணிந்து கையேந்துவோர் நாமல்ல


தேர்தல் காலங்களில் வீர வசனம் பேசி அரசாங்கத்தை விமர்சித்துவிட்டுத் தேர்தல் முடிந்ததும் அடங்கி ஒடுங்கிச் சென்று சலுகைகளுக்காகக் கையேந்தும் செயற்பாடு தமது கட்சியிடம் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்
அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தேர்தல் வேளையிலும் அல்லாதபோதும் ஒரே கொள்கை, கோட்பாட்டுடன் செயற்படு வதால் தமது கட்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்களென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் நலன்களைப் பேணுவதுடன் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்காகவே மேல் மாகாணத்தில் களமிறங்குவதாகத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் தமது கட்சியின் தனித்துவக் கொள்கையை முற்று முழுதாக அடகு வைத்துவிடவில்லை என்றும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் பழிக்காக எல்லா விடயங்களையும் அங்கீகரிப்பதாகக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.தமது இணை யத்தளம் அங்குரார்ப்ப ணத்திற்குப் பின்னர் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar