அரசிலிருந்து மு. காவை வெளியேற்றும் நோக்கம் கிடையாது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் விவகாரம் குறித்து ஐ. ம. சு. மு. ஊடகவியலாளர் மாநாட்டில் வினவப் பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஐ. ம. சு. மு. வில் உள்ள கூட்டுக் கட்சிகளிடையே வேறுபட்ட கொள்கைகள் உள்ளன. அவை பொது நோக்கின்படி ஒன்றாக இயங்கி வரு கின்றன.
இந்தப் பிரச்சி னையை பேசித் தீர்க்க முடியும். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் எந்தப் பிரச்சினையையும தீர்க்க முடியும். புலிகளினால் பள்ளியினுள் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு வீடுகளிலும் புகுந்துகொல்லப்பட்டனர். சில அமைப்புகளே பள்ளிவாசல்களுக்கு சேதம் ஏற்படுத்துகின்றன. இதற்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு கிடையாது.