BREAKING NEWS

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை பற்றிய கூட்டம் இன்று

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை பற்றிய கூட்டம் இன்று சாய்ந்தமருதில் அமைச்சர் அதாவுள்ளா தலைமையில் நடைபெறவுள்ளது.
கல்முனை முன்னாள் மேயர் சிராசின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது
நியு மெரிதின் ஹோட்டலில் இது நடைபெறவுள்ளது. கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை பிரதேச வாதம் காரணமாக வெல்ல வைத்த கல்முனைக்குடி, சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்கள் இப்போது ஆப்பு இழுத்த குரங்கு போல் முழித்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
கல்முனைக்கு அதாவுள்ளா வந்தால் கல்லால் அடிப்போர் இப்போது விழி பிதுங்கி நிற்பதாகவும் தெரிகிறது. போகிற போக்கில் கல்முனையின் தலைவராக அதாவுள்ளா பிரகடனப்படுத்தப்படலாம். முபாறக் மௌலவி தலைமையிலான கல்முனைக்கான தனிக்கட்சியை பலப்படுத்த முனையாமல் வெளிமாவட்ட தலைமைக்கு முட்டுக்கொடுத்த மக்கள் இனியாவது அரசியல் யதார்த்தத்தை புரிந்து உடனடியாக கல்முனைக்கான தனிக்கட்சியை பலப்படுத்துவது தவிர்ந்த வேறு வழி இல்லை என்பதே உண்மையாகும்.
-ஸாஹித்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar