தேர்தல் காலத்தில் மட்டும் அமைச்சர் ஹக்கீம் இஸ்லாம் மதவாதத்தை முஸ்லிம்களுக்கு இடையே பேசி அவரது கட்சிக்கு வாக்கு கேட்கின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனினும் முஸ்லிம்கள் ஒருபோதும் இனவாத கட்சிகளுக்கு துணை போகவில்லை. அவர்கள் தேசிய ரீதியிலான கட்சிகளிலேயே அங்கம் வகிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, கிரோண்பாஸ் பகுதியிலுள்ள ‘சமகிபுர’ தொடர் மாடி வீடமைப்பு திட்டம் 110.5 மில்லியன் ருபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடமைப்பு திட்டம் அமைச்சர் விமல் வீரவன்சவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் விமல்;
“யுத்தத்தினால் கொழும்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சகல இனங்களும் அச்சத்துடன் வாழ்ந்தார்கள். வெளியே செல்வதற்கும் பஸ்ஸில் அல்லது புகையிரதத்தில் பிரயாணம் செய்வதற்கும் பயப்பட்டார்கள்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்களுக்கு இந்த நாட்டில் வாழும் சகல இனங்களும் பாhதிக்கப்பட்டனர். சகல இனங்களும் குண்டுகளாலும் துவக்குகளாலும் அழிந்து மடிந்தனர்.
அப்போது இந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் யாவரும் கேட்டதெல்லாம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றே. அதன் எதிர்பலனே நாம் இந்த நாட்டில் சிறுக சிறுக அனுபபித்து வருகின்றோம். தற்பொழுது இந்த நாட்டில் மீள ஒரு யுத்தத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளும் முயற்சிக்கின்றனர்.
இதற்குப் புறம்பாக பௌத்த – முஸ்லிம் இனங்களுக்கிடையே இனத்துவேசத்தை ஏற்படுத்தி இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தை குழப்புகின்ற்னர். இந்த கிராண்பாஸ் ‘சமகிபுர’ என்ற தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் முவினங்களையும் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். தமது அருகாமையில் உள்ள தொடர் மாடி வீட்டில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள் என பலர் வாழ்கினறனர்.
இச்சமுகங்கள் மிகவும் அன்ணியோண்னியமாக சகல சமுகங்களின் நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளின் ஒரு தாய் குழந்தைகள் போன்று பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். இன ரீதியிலான கட்சிகள் தேர்தல் காலத்தில் இனவாதாத்தை கக்கி அம்மக்களின் இன ஜக்கியத்தை குழப்புகின்றனர்.
அதில் எமது பௌத்த இயக்கங்களும் சில செயற்படுகின்றன. இவர்கள் என்னதானும் கூறினாலும் இம் மக்கள் தமது எந்த இனவாதத்திற்கும் துணைபோக மாட்டார்கள்” என்றார்.