தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிஹின் லங்கா நிறுவனம் முழுமையாக மத்தல விமான நிலையத்திற்கு தனது பணிகளை மாற்றிவிடும் என்றும் அங்கு மிஹின் லங்கா விமானங்களுக்கு எரிபொருளை நிரப்புதல் போன்ற பலதரப்பட்ட பணிகளை ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்படுகிறது.
மிஹின்லங்கா விமான நிலையத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயரட்ன தெரிவித்தார். தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் மூன்று விமானங்கள் இருக்கின்றன. இதனடிப்படையில் மிஹின் லங்காவின் விமான சேவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது