BREAKING NEWS

அமைச்சர் ரிசாதுக்கு கொழும்பில் படு தோல்வி

அமைச்சர் ரிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பில் பாரிய படுதோல்வயை சந்தித்துள்ளது.

ஒரு அமைச்சரின் தலைமையிலான கட்சி கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தும் ஒரு உறுப்பினரையே பெற்றுள்ளதானது அதன் பரின்னடைவை காட்டியுள்ளது. அதுவும் ஏற்கனவே மாகாண சபையில் இருந்த ஒருவரே மீண்டும் வந்துள்ளமை என்பது அந்த மாகாண சபை உறுப்பினரின் தனிப்பட்ட வெற்றியே தவிர அமைச்சர் ரிசாதின் கட்சிக்குரிய வாக்ககுள் அல்ல என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும்.
   ஊடக விளம்பரங்கள், பல கட்அவுட்கள், பாரிய கூட்டங்கள்  என பாரிய விளம்பரங்கள் செய்தும் கொழும்பு முஸ்லிம்கள் அ.இ.ம. காவை நிராகரித்துள்ளார்கள். அத்துடன் இன்னொரு பாரளுமன்ற உறுப்பினரான பிரபா கனேசனையும் அமைச்சர் ரிசாத் தனக்கு துணையாக அழைத்து தமிழ் மக்களை அக்கட்சியில் போட்டியிட வைத்தும்; சுமார் பதினையாயிரம் வாக்குகளை பெற்றமை மிக மோசமான தோல்வியாகும்.
அமைச்சர்களான ஹக்கீமும், ரிசாதும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலான முஸ்லிம் வாக்குகளை பிரித்து ஐ தே கவை கொழும்பில் தோல்வியடையச்செய்யும் முயற்சிக்கு கொழும்பு முஸ்லிம்கள் மிக அமைதியாக பதிலடி கொடுத்துள்ளார்கள்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் மக்கள் கட்சி,
கல்முனை

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar