தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்பும் அனுமதிகளைப் பெறவும் பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை வேட்பாளர் நடிகை நதீஷா ஹேமமாலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்;
சிறந்த படைப்புகளை உருவாக்கும் கலைஞர்கள் தமது படைப்புகளுக்காக அப்படியான விடயங்களை அணுகுவதில்லை. உரிய முறையில் படைப்புகளை உருவாக்காதவர்களே இவ்வாறான விடயங்களில் பாலியல் ரீதியான அணுகலை மேற்கொண்டு குறைந்த விலையிலேனும் தமது படைப்புகளை வெளியிட முன்வருகின்றனர்.
இது கலைத்துறையில் மாத்திரமல்ல வேறு துறைகளிலும் காணப்படுகிறது. புதிதாக பணியில் சேரும் இளம் பெண்ணொருவர் அந்த நிறுவனத்தில் உள்ள அதிகாரமிக்கவர்களின் அழுத்தங்களுக்கு உள்ளாகலாம்.
பொதுவாக அனைவரும் அப்படியானவர்களாக இல்லாவிட்டாலும் சிலர் அப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். புதிதாக கலைத்துறைக்கு வரும் நடிகைகளுக்கு மாத்திரமல்ல எந்தத் துறையிலும் புதிதாக வரும் இளம் பெண்களுக்கு இது பாரிய அநீதி.
இலங்கையில் தற்போது பாலியல் ரீதியான குற்றச்செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்கக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் பல்வேறு வகையான இடையூறுகளை சந்தித்தவர்கள் பற்றிய செய்திகள் வருகின்றன.
அழுத்தங்கள் தொந்தரவுகளை கொடுப்பவர்களின் மனோபாவமே இதற்குக் காரணம்.
அவர்கள் கடும் அழுத்தங்களில் இருப்பதன் காரணமாகவே ஏனையோரை அழுத்தங்களுக்கு உட்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.