முஸ்லிம் மக்கள் ஆளுக்கொரு கட்சியாக பிரிந்து நிற்கும் போது முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு ஒற்றுமைப்பட முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.
கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் மக்கள் கட்சி ஆதரவாளர் மத்தியில் பேசுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
முரண்பாடுகளை களைந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். இதில் இரண்டு விடயங்கள் இங்கு உள்ளன. முரண்பாடுகளை களைதல், மற்றையது ஒன்று படுதல். நமது கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளை களைவது எவ்வாறு? அது சாத்தியமாகுமா என்பது பலமான கேள்வியாகும்.
அரசியல் கட்சிகளுக்கிடையில் பல முரண்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஒரு கட்சி இன்னொரு கட்சியை ஏற்காமையாகும். ஒருவரை ஒருவர் ஏற்காத போது முரண்பாடுகளும் நீங்காது ஒற்றுமையும் வராது.
சரி முரண்பாடுகளை நீக்காமலேயே ஒற்றுமைப்பட முடியுமா? அதற்கும் சாத்தியமில்லை.
ஆக குறைந்தது சமூகப்பிரச்சினைகளை ஒன்றாக இருந்து ஆராய்வது என்ற கொள்கையிலாவது முஸ்லிம் கட்சிகள் ஒன்று பட வேண்டும். அதற்கு முதலில் களத்தில் உள்ள கட்சிகள் ஒருவரை ஒருவர் ஏற்க வேண்டும்.
முஸ்லிம் பொது மக்களே ஒன்று படாத போது எவ்வாறு அவர்களின் பிரதிநிதிகள் ஒன்று படுவர்? பொதுமக்களே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர், மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர், அதாவுள்ளா கட்சி ஆதரவாளர் என பிரிந்து நிற்கும் போது, ஒருவரை ஒருவர் கேவலமாக விமர்சிக்கும் போது, சண்டை வேறு பிடித்துக்கொள்ளும் போது எவ்வாறு கட்சிகள் ஒன்றுபடும்?
ஆக கட்சிகள் ஒன்று படுவது என்பது இப்போதைக்கு சாத்தியமானதாக தெரியவில்லை. முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்றும் அதற்குரிய யாப்புகளையும் கூட உலமா கட்சி வரைந்து 2006ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு அனுப்பி வைத்தது. இது பற்றி ஊடகங்களிலும் செய்தி வந்தது. முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்து செயற்பட பெரிய கட்சி என்ற வகையில் நீங்கள் முன் வாருங்கள் என ஸ்ரீ மு. காவுக்கு அழைப்பு விடுத்தோம். ஒற்றுமைக்கான எமது அழைப்பு குப்பைத்தொட்டிக்குள்தான் போனது. ஆக இன்னமும் நாம் இந்த அழைப்பை முஸ்லிம் காங்கிரசுக்கு விடுக்கிறோம். எமது அழைப்பை அக்கட்சி ஏற்று முதலில் சிறிய கட்சிகளுடனாவது சமூக நலன் பற்றி பேச்சுவார்த்தை நடாத்தி கூட்டமைப்பாக செயற்பட முன்வர வேண்டும். அதனை உதாரண முன்னெடுப்பாக வைத்து ஏனைய அதிகாரமுள்ள முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைக்க மக்கள் முயற்சி எடுப்பார்கள்.
கட்சிகளின் ஒற்றுமைக்கான எமது இந்தப்பிரேரணை தவறானது என்றால் அதற்கான மாற்றீட்டை முஸ்லிம் காங்கிரசாவது முன்வைக்க வேண்டும். ஆற்றைக்கடப்பதற்கு சிறியதொரு படகையாவது ஏற்பாடு செய்யாமல் வெறுமனே கரையில் நின்று கொண்டு படகு வேண்டும் என கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லை என்பதை கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என கூறுவோர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு கூட்டமைப்புக்கு வரவேண்டுமென முஸ்லிம் கட்சிகளின்; ஆதரவாளர்கள் தமது விருப்பு கட்சிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் ஒற்றுமை பற்றி பேசுவதை விடுத்து உலமா கட்சியுடன் இணைந்து தமது ஒற்றுமையை காட்ட முன்வரவேண்டும்.