BREAKING NEWS

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடலாமா?



download (1)
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடலாமா இல்லையா என்கின்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் குடியுரிமைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது கடந்த மாகாண சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிக்கும் உரிமை இருக்குமாயின், தேர்தலில் போட்டியிடவும் உரிமை இருப்பதாக சரத் பொன்சேகாவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை பொன்சேகா தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தாலும் அதனை நிராகரிக்க தனக்கு அதிகாரமில்லை எனவும் அதன் சட்ட ரீதியான நிலைமை குறித்து நீதிமன்றமே தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளரும் கூறியிருந்தார்.
ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் கடந்த முறை கிடைத்த வாக்குகளை அப்படியே தக்கவைத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகளே எமது கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் கிடைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களின் வாக்குகள் எந்த அடிப்படையிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்க போவதில்லை.
இதனால் அரசாங்கத்தின் வாக்குகளை சிதறடிக்க பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க உள்ளோம் எனவும் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவின் இந்த தீர்மானம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar