கல்முனை அரசியலில் பனிப்போரும் பலமிழந்து செல்லும் அரசியல் அதிகாரங்களும்
கல்முனையில் அரசியல் பனிப்போரானது ஒவ்வொரு கட்சிகழுக்குள்ளும் நடந்துகொண்டிருப்பதனை அவ்வப்போது
நடைபெறுகின்ற நிகழ்வுகளின் வெளிப்பாடு தெளிவுபடுத்துகின்றதனை அண்மைக்காலமாக அவதானிக்கமுடிகிறது.
இதனால் ஒவ்வொரு தரப்பிலிருந்தும் அவரவர் பங்கிற்கு சாதாரண வாழ்க்கை நடத்தும் பொதுமக்களை பந்தாடுவதனை
சர்வசாதாரணமாக காணமுடிகிறது. அவ்வறான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவதில் எந்தவித அச்சப்பாடும் இன்றி
நடைமுறைப்படுத்துவதிலும் இலாபம் அடைவதிலும் குறியாக இருக்கின்றனர். இதில் வெற்றிகண்டவர்களாகவும்
பெருமை பேசிக்கொள்ளும் அரசியல் தலைவர்களாகவும் அறிக்கைவிடுபவர்களாகவும் இருக்கின்றார்களே தவிர இவர்களை
வாக்களித்து தெரிவுசெய்த மக்களின் தேவையை பூர்த்திசெய்யும் சேவகர்களாக இல்லாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய
விடயமாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.
பெரும்பான்மை இன அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்டு வந்த அடக்குமுறைகளின்
விடுதலைக்காக சாத்வீகப் போராட்டம் நடத்திய தமிழ்பேசும் அரசியல் தலைமைத்துவங்களை தொடர்ந்துவந்த
ஆட்சியாளர்கள் பலவகையிலும் கட்டுப்படுத்தினர்.முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு திணிப்பு சலுகைகளைக்
கொடுத்தும்.சில தமிழ்கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளை
மறுக்கப்பட்டு தழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை மறுக்கப் பட்டது. இதன் அடுத்த கட்டமாக தமிழ்பேசும் மக்களின்
அரசியல் எழுச்சியானது ஆயுதத்தின் மூலம் போராட்டவடிவத்திற்கு அப்போதய சிங்களப்பேரினவாத அரசுகளினால்
கூட்டிச்செல்லப்பட்டது. அப்போதும் தமிழ்பேசும் சமூகமாகவிருந்த தமிழ் முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தி தமது
அரசியல் இலாபத்தை பெற்றுக்கொண்ட சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்தும் பிரித்தாழ்வதில் ஆர்வம் காட்டியும்
வந்தனர். அதேவேளை தமிழ்ப்போராளிகளை அழித்தொழிப்பதில் தீவிரம் காட்டிவந்த வேளைகளில் தமிழினத்தையும்
பூண்டோடு அழிப்பதில் குறியாய் இருந்தனர். அவ்வாறு செய்யப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துவதனை இறுதியுத்தச்
சூழலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தெளிவுறுத்தி நிற்கின்றது.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் பங்குபற்றிய கட்சிகளில் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக்
கொண்ட அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அது தனது தேர்தல் பரப்புரையின்போது
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு சிங்களப் பேரினவாதிகளால் கொண்டுவரப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக
பலமேடைகளிலும் முஸ்லிம்களை உசுப்பேற்றும் இனத்துவேசப் பேச்சுக்களைப்பேசினர். அவர்களுடைய பேச்சு
யதார்த்தங்களான உண்மையாகவிருந்தது அதனால் முஸ்லிம்களின் பெருமளவு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற
முடிந்தது.
இத்தேர்தலில் கூட்டாட்சியமைக்கத் தேவையான பலத்துடன் காணப்பட்ட த.தே.கூட்டமைப்பும் அதற்கு
அடுத்தபடியில் இருந்த ஐ.ம.சு.கவும் பேரம்பேசிப் பழக்கப்பட்ட மு.காவை அரவணைக்கும் விடயத்தில் களமிறங்கின.
அன்றைய நிலவரத்தின்படி வாக்களித்த பெரும்பான்மை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு சிங்களத் தீவிரவாதத்தின்
எதிரொலியாக தமிழ்மக்களின் ஏக குரலாக ஒலிக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்குமாகாண சபையை
அமைக்கவேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் இச்சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பலாத்கார
ஆட்சியமைப்பு கிழக்குமாகாண சபையில் நடந்தேறியது.இதன்மூலம் தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில் அழியாத்
துரோகத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் செய்துள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
இதில் நேரடியாக பாதிக்கப்பட்டது கிழக்கு முஸ்லீம்கள் மட்டுமல்ல இலங்கைவாழ் அனைத்து முஸ்லீம்களும்தான்
என்பதே உண்மை.போராடிப்பழக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் அதன்கட்சிகளுக்கும் இது ஒரு பெரும் சவாலாக இருந்தாலும்
அவர்களது முன்னேற்றப்பாதைக்கு இது ஒரு சிறு தடைக்கல்லாகவே கருதப்படுகிறது.வாக்களிக்கும் மக்கள் எப்போதும்
ஏமாளிகளாக இருக்கமாட்டார்கள் என்பதை முஸ்லிம்காங்கிரஸ் போன்ற கட்சிகள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய
கட்டாயம் இங்கு உணரப்படவேண்டியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முழு நாட்டுமக்களில் பெரும்பான்மையினர் வாக்களித்ததன்மூலம்
ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்க்ஷவை தெரிவுசெய்துள்ளனர்.எனவே அவர் இன் நாட்டின் ஜனாதிபதியாகவிருந்து
சகல மக்களையும் சமமான முறையில் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதே அவரது கடமையாகவிருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய அரசு தனது முழு அதிகாரத்தையும் வடக்கு மக்களின் பெரும்பான்மை விருப்புவாக்குகளை
பெற்றுவந்த முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுட்த்தும் விதமாக அல்லது மகாணசபை
முதலமைச்சரின் வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பெரும்பன்மை
இனத்தைச்சேர்ந்த இராணுவ அதிகாரியை ஆழுனராக நியமித்திருக்கிறது.அதுபோல இலங்கை ஆட்சி இறைமைக்குட்பட்ட
மாகாணங்களின் ஆட்சியமைப்பானது குறுநில மன்னர்கள் ஆட்சிபோன்றது.எந்த மக்கள் எதைவிரும்பி யாருக்கு
வாக்களித்தனரோ அந்த மக்களின் விருப்புக்களை நிறைவேற்றுவதே அந்த தலைவரின் பொறுப்பாகும். அந்தவகையில்தான்
வடக்கு மக்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் சேவை செய்யவேண்டிய தேவை முதலமைச்சருக்கு இருகின்றது.
மேலும் குறிப்பாக கடந்த 30வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மயாக வாழும் தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும்
முக்கியதேவை வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு பரந்த அளவில் உணரப்பட்டுள்ளது.எனவே அதனை நிறைவேற்றுவதில்
தடையாக மத்திய அரசையும் மந்திரிசபயையும் தனது அதிகார வலையமைப்பினுள் வைத்திருக்கும் அதிமேதகு
நிறைவேற்று அதிகாரம் கொண்டஜனாதிபதி அவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதனாலும் தமிழ்
பேசும்மக்கள்மீது தமது ஆதிக்கத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இப்போதைய ஜனாதிபதி
தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவும் தமது கட்சியே இன் நாட்டை ஆளும் கட்சியாகவும் அதனை வழிநடத்துவது
தமது குடும்பத்தினராகவும் இருக்கவேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் செய்வதற்கு ஆயத்தமாக உள்ளனர்.
கிழக்கு மாகாணசபையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் வடக்கில் எவ்வாறான
படுதோல்வியை அரச தரப்பு சந்தித்ததோ அதைவிட மோசமான தோல்வியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும்
பாராளுமன்றத்தேர்தலிலும் சந்திக்கவிருக்கின்றனர். இதற்கு முன்னோட்டமாக டிஸ்ம்பர் 31ந் திகதி வருட இறுதிக்
கொண்டாட்டதில் அரசாங்க முக்கியஸ்தர்கள் கூத்தாடிகள் மேடையோடு சரிந்து கைகால்கள் உடைந்தும் காயப்பட்டும்
போயிருப்பதை உதாரணமாக சொன்னாலும் மிகையாகாது.நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகச் சொன்னதால்
தான் சிங்கள மக்கள் பெருமளவில் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர். இதனைப் பயன்படுத்திய மகிந்த குடும்பத்தினர்
இனத்துவேசக் கருத்துக்களை வெளிக்கிடும் வகையில் சிங்களத்தீவிரப் போக்கினை கொண்ட குளுக்களை உருவாக்கினர்.
அவர்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடப்பட்டனர். இச்செயலானது அரசுக்கு
தற்காலிக சந்தோசத்தை அல்லது தற்காலிக அரசியல் இலாபத்தை கொடுத்தாலும் பின்விளைவானது பாரதூரமான
விளைவையே கொடுக்கக் காத்திருக்கிறது.
பொதுபலசேனா, சிகள உறுமய, ராவண பலய போன்ற அமைப்புகள் நாட்டின்
அமைதி நிலையை குளப்பும் விதத்தில் எத்தனையோ சம்பவங்களை நடத்தினார்கள்.அத்தனையையும் இன் நாட்டின்
முடிசூடா மன்னர்கள் பின்னாலிருந்து சிறுபான்மைக்கு எதிரான கொடுமைகளை ரசித்தனரே அன்றி தடுக்கமுன்வராதது
அவர்கள் பேரினவாதிகள் என்பதனை பறைசாற்றி நிற்கின்றது.இன்னாட்டின் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்ட
ஜனாதிபதியாகவும் சிறந்த தலைவராகவும் இருந்திருப்பாரேயானால் 50 வருடமாக விடுதலைக்காகப் போராடிய
சமூகத்தை இராணுவச் சப்பாத்துகளாலும் பயங்கர ஆயுதங்களாலும் நசுக்கி பொசுக்கி அடக்கியவர்களால் சிறு சிறு
குளுக்காக்களாகவிருந்து நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் குழப்பிக்கொண்டிருக்கும் கூட்டத்தை அடக்க
முடியாமலிருப்பது வியப்புக்கும் நகைப்புக்கும் உரிய விடயமல்லவா?
ஏன் இதுவரை இன் நாட்டின் தலமைத்துவம் இதுபற்றி தீர்மானம் ஒன்றில்லாமல்
இருப்பதாக சாதரண சிறுபான்மைப் பொதுமக்கள் இதுதான் தலைவிதியோ என்று நினைக்கின்றார்கள். இந்த இடத்தில்
உண்மையை சொல்லியே ஆகவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை ஒரு சிங்களபௌத்த நாடு என்பதும்
இதில் சிறுபான்மையினரான தமிழ்பேசும் மக்கள் வந்தேறு குடியேறிகள் என்றும் சிங்களவர்கள் ஆளப்பிறந்தவர்கள்
எனும் விக்ஷத்தை சிங்களப்பேரினவாதிகள் சிங்கள மக்களிடத்திலே ஊட்டிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தமிழ்
பேசும் மக்கள் தனித்துவமாக வாழ்வதையோ நின்மதியான வாழ்க்கை நடத்துவதையோ சிங்களப்பேரினவாதிகள்
விரும்புவதில்லை. எனவே தான் ஆட்சியிலிருக்கும் தலைமைகள் முன்னின்று செய்வதனைவிட சில மதம்சார்ந்த
அமைப்புக்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதே தங்களுக்கு பாதுகாப்பு என்பதற்காக பொதுபலசேனா போன்ற
அமைப்புக்களைப் பயன் படுத்துகின்றனர்.
இவர்களுடய நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியிலிருக்கும் தலைமைகளின் திட்டமிட்ட
நடவடிக்கைகளாகும். வடமாகாணத்தில் நடத்தப் பட்ட தேர்தலானது கிழக்குமாகாணத்தின் தேர்தல் முடிவினை
வைத்தே கணிக்கப் பட்ட ஒன்றாகும். கடந்த யுத்தகாலத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்
தரப்பில் முக்கிய பங்குவகித்து ஆயுதப் போராட்டத்தில் அதியுயர் நிலைவகித்த விடுதலைப்புலிகள் அமைப்பின்
கட்டமைப்பை பலவீனப்படுத்த கருணா, பிள்ளையான் போன்ற எட்டப்பர்களை தம்பக்கம் வழைத்து எடுத்ததுபோல
புலிகளுக்கு ஆயுதம் பெற்றுக்கொடுத்த குமரன் பத்மநாதன்,மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி டக்ளஸ்,
பேரம் பேசி சோரம்போகும் வீரன் முஸ்லிம்காங்கிரஸ் ரௌஃப் ஹகீம் போன்றோருடனும் வடபுல புலம்பெயர்
முஸ்லிம்களின் தலைவர் ரிசாத்பதியுதீனையும் நம்பி வடமாகாண தேர்தலை நடத்த முற்பட்டது எவ்வளவு பெரிய
தவறு என்பது அப்போது அவர்களுக்குப் புரியாமலிருந்தது. யுத்த வெற்றிக்களிப்பில் பால்சோறு உண்டுமகிழ்ந்து
தமிழ் மக்கள் பரம்பரையாக வாழ்ந்த பிரதேசங்களை தங்களது பூமி என்று அழிவின் உச்சமான மயான பூமியை பார்த்து
சந்தோசமடைந்து சொந்தம் கொண்டாட சுற்றுலவரும் அப்பாவி சிங்கள மக்களைப்போல் இவ்வாட்சியாளர்களும் மூன்றில்
இரண்டு பெரும்பான்மையை வடக்கிலே பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தனர். ஆனால் ஆட்சியை தீர்மானிக்க
வேண்டியது வாக்களிக்கின்ற தமிழ் பேசும் வாக்காளர்கள் என்பதை இவர்களது கணிப்பு மறந்துவிட்டது.
ரஜபக்க்ஷ குடும்பத்தினர் நினைத்தது போன்று வடமாகாணம் எனும் சிம்ம சொர்ப்பணத்தை
வெற்றி பெற்றிருந்திருந்தால் யுத்தத்திலே வகைதொகை இன்றி கொல்லப்பட்ட அப்பாவி பொதுசனங்கள் அழித்தொழிக்கப்
பட்ட போராட்ட வரலாறுகள் மீதமாய் இருந்த அவ்வப்போது அழிக்கப்பட்டுவரும் அடையாளச் சின்னங்கள்,தமிழ் பேசும்
மக்களின் உரிமைகள் அத்தனையும் நியாயமற்றது என உலக அரங்கிலே புகள் பாடி இருப்பர். ஆனால் நாட்டின்
தலைவிதியை மட்டுமல்ல ஆட்சியை மட்டுமல்ல தமிழர்களின் தலைவிதியையும் வாக்களிக்கும் மக்கள்தான் என்பதனை
வடபுல தமிழ்பேசும் மக்கள் இந்த அரசுக்கு எடுத்துச் சொல்லிக் காட்டியுள்ளார்கள்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை
எடுக்கமுடியும் என்று எதிர்பார்த்த அரசுக்கு ஐந்தில் நான்கு அறுதிப்பெரும்பான்மையை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு
பெற்றுக்கொடுத்ததன் மூலம் வடக்கு கிழக்கு மண் தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான பூமி என்பதனையும் இலங்கையில்
தமிழ்பேசும் மக்கள் அடக்கப் படுகின்றனர் ஒடுக்கபடுகின்றனர் என்பதனையும் உலகிற்கு எடுத்துக்கூறிய பெருமை
வடபுலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களையே சாரும்.
வடபுலத்தில் வாக்களித்த மக்கள் தங்களுக்காக என்றில்லாது தமக்கு பின்வரும் சந்ததிகளின்
நல்வாழ்வுக்காகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்தது என்பதனை ஒவ்வொரு தமிழ் தேசியக்கூட்டமைப்பு
பிரதிநிதிகளும் முடிவுகள் எடுக்கக் கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவில் கொள்ளவேண்டும்.இதை விடுத்து
தங்களது சுய இலாபங்களுக்காக தலைமைத்துவக் கட்டுப்பாட்டுக்கு இல்லாமல் தான்தோன்றித்தனமான போக்கில்
கட்சிக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் பயனற்றுப்போகும் விதத்தில் செயற்படுவது தங்களை மட்டுமல்ல தமது
சந்ததியினரையும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அவ்வாறான ஒரு நடவடிக்கையினைச் செய்யும்போது இன்று தமிழ்பேசும் மக்காளால் தனிமைப் படுத்தப் பட்டுள்ள
அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் தெரிவாகி இருந்த பியசேன பாராளுமன்ற உறுப்பினரை உதாரணமக
கொள்ளவேண்டும்.
இன்றைய நிலவரப்படி மக்கள் விழிப்புடன் தான் இருக்கின்றார்கள். ஆனால்
அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களோ தங்களுடய பதவிக்கும் பட்டத்துக்கும் வருமானத்தை பெருக்கிக்கொள்ளவும்
படாதபாடு படுகின்றார்கள்.சுனாமி பேரலையால் கரையோரப் பிரதேசங்கள் பாதிக்கப் பட்டு இவ்வருட மார்கழி 26டன்
9வருடங்கள் பூர்த்தியாகி 10வது ஆண்டும் ஆரம்பித்துவிட்டது.சுனாமியால் மிகவும் மோசமாக பாதிக்கப் பட்ட
பெரிய நீலவணை மருதமுனை தொடக்கம் பொத்துவில் அறுகம்பை வரையான இடங்களில் இன்றுவரை கட்டி
முடிக்கப்பட்ட வீடுகள் இருந்தும் இன்றுவரை அகதி வாழ்க்கை நடாத்திவரும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட
வீடுகளை கொடுப்பதற்கு தடையாக அந்தந்த பிரதேச அரசியல் வாதிகளும் அராசாங்க அதிகாரிகளும் காரணமாக
இருப்பதாக பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் சுனாமி நினைவுகூறல் தினத்தன்று அக்கறைப்பற்று
மக்கள் வீதிக்கிறங்கி வீதியில் உணவு சமைத்து உண்டு நினைவு கூர்ந்ததானது ,கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு
மருதமுனை மக்கள் இரண்டு நாட்களாக வீதியில் உணவு சமைத்து உண்டு வீதியிலே உறங்கியதனை நினைவூட்டியது.
இவ்வாறான போராட்டங்கள் பல நடந்தாலும் இன்றுவரை கட்டிமுடிக்கப் பட்ட வீடுகளை கட்சிக்கு ஒருவராக வந்து
பார்த்துவிட்டு கூடிய சீக்கிரம் முடிவு தருவதாக அல்லது குடியேற்றுவதாக வாக்குறுதியளிதுச் செல்கின்றன்ரே தவிர
எதுவும் முடிவுக்கு வராத நிலையில் இன்றும் முறைகேடான முறையில் குடியேறியதாக பிரதேசச் செயலாளர் கொடுத்த
வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றன்களில் வழக்குகளோடு பாதிக்கப் பட்ட
மக்கள் நீதி மன்றங்களில் அல்லாடுகின்றனர்.
இதேவேளை வடக்கிலே அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஒருபுறம், மறுபுறம் அபிவிருத்தி என்ற பெயரில் மகிந்த அரசுக்கு எதிர்த்து வாக்களித்த மக்களை பழிவாங்கத்துடிக்கும்
அரசு. இவர்களுக்கிடையில் கட்டுக்கடங்கா வாழ்க்கை செலவினால் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்ற நிலைமை.
எந்த ரூபத்திலாவது தமிழ் மக்களை அடிமைப் படுத்துவதிலும் அடக்கியாழ்வதிலும் அரசதரப்பில் முயற்சி நடந்துகொண்டே
வருகிறது. விடுதலைப் போராளிகளை ஆயுதத்தால் அழித்தொழித்த அரசு மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்குப்
பதிலாக தமிழ் பேசும் மக்களின் மனங்களில் மாறா வடுக்களையே தொடர்ந்தும் உருவாக்குகின்றது. இன்னும் புலிகளின்
அச்சம் இருப்பது போலவும் இராணுவ அடக்குமுறையை நம்பி ஆட்சியை நடத்துவது போலவும் வடபகுதியில் இராணுவ
நிலைகள் பலப்படுத்தப் பட்டும் புலனாய்வுப்பிரிவினர் குவிக்கப் பட்டுமுள்ளது.இன்னிலை வடக்கில் மட்டுமா என்று
பார்த்தால் கிழக்கிலும் அதே நிலமை நடந்து கொண்டு வருகிறது.
சிறுபான்மை மக்களை திறந்த சிறைச்சாலை வடிவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும்
பொருளாதாரத்தை முடக்கி சிறுபான்மையினரின் பலத்தை குறைக்கவும்,தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில்
சிங்களக் குடியேற்றத்தை செய்யவும் பௌத்த அடையாளச் சின்னம் நிறுவுவதற்கும் சிங்களக் கட்சிகளை பிரதினிதி படுத்தும்
மாவட்டமாக மாற்றுவதற்குமான நடவடிக்கையை இந்த மகிந்த அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.இந்த வேளையில்
தமிழ் பேசும் மக்களை பிரதிநிதி படுத்தும் கட்சிகளின் உறுப்பினர்கள் எல்லை பிரிப்பென்றும் இனப் பாகுபாடு என்றும்
தங்களுக்குள்ளே மோதிக்கொண்டு அறிக்கைகள் விடுவது என்பது எமது எதிர்கால நடவடிக்கைகளுக்கும் ஒற்றுமைக்கும்
ஆரோக்கியமாக அமையாது. அது இன்று அரசு எதிர்பார்த்த பிளவுபடுத்தலுக்கு தீனிபோடுவதாக அமைந்து வருவதனை
வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட பிக்குகளாக இருந்தால் கல்முனை தமிழர்கள்
என்றில்லாது இலங்கையிலுல்ல மொத்த எல்லாத் தமிழர்களுக்குமாக அனுதாபப் பட்டு இலங்கை அரசுடன் பேசவேண்டியதே
நியாயம். அதை விட்டு குட்டையை குழப்பி இலாபம் தேட நினைப்பது தர்மமும் அல்ல, நியாயமும் அல்ல.
இதற்கு உதாரணமாகத்தான் நாங்கள் நிந்தவூரில் கடந்தமாதம் நடைபெற்ற அசாதாரண
சூழ்னிலை ஏற்படுத்திய சம்பவத்தை கூறலாம்.அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில்
இராணுவ நிலைகள் ஆங்காங்கே பலவந்தமாக நிறுவிய அரசு தேவையான காரணங்களை பொதுமக்களுக்கு தமது
வசதிக்கேற்ப அவ்வப்போது கூறிவந்தது.ஆனால் இவர்களுடைய இராணுவ பொலிஸ் கண்காணிப்பின் இடைவெளித்தூரம்
நிந்தவூரைப் பொறுத்த வரைக்கும் கூடுதலான இடைவெளியைக் கொண்டதால் அங்கும் கண்காணிப்பு நிலயை ஏற்படுத்தவென்றெ
விஷேட அதிரடிப்படைனரைக் கொண்டே கலகத்தை உண்டுபண்ணினர்.கிராம மக்களும் திட்டமிட்டு சிலநாள் காத்திருந்து
குழப்பவாதிகளை கையும் களவுமாக பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டது.அடையாளம் காணப்படாத குளப்பவாதிகளும்
அரசாங்கத்தாரின் நாடகமும் வெளிச்சம் போட்டுக்காட்டப் பட்டன.பொலீசாரிடம் ஒப்படைக்கப் பட்ட சந்தேக நபர்களை
அதே இடத்தில் வைத்து மேலதிக விஷேட அதிரடிப்படையினர் ஆயுத தாரிகளக வந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்த்து
பொலீசாரையும் பொதுமக்களையும் அச்சுறுத்தியே மீட்டுச்சென்றனர்.இதில் நாடகமாடினர் பொலிசார் ஏமாந்தது பொதுமக்கள்.
பிரச்சினைக்கு முடிவு தேவை என்பதில் பொதுமக்கள் உறுதியாகவிருந்தனர். அடுத்த நாள் ஊர்ப் பொதுமக்கள்
ஹர்த்தால் அனுஸ்டிக்க முடிவெடுத்தனர். ஹர்த்தாலும் நடைபெற்றது.மறுபுறத்தில் ஆளும் தரப்பின் பாதுகாப்பு உயர்
மட்டத்திலிருந்து கிடைக்கப் பெற்ற உத்தரவின்படி நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான
பைசல் காசிமினாலும் பிரதேச சபை உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆப்பு கொடுக்கப் பட்டது.
இந்த நிலையில் இதற்கான நியாயமான முடிவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருந்த பைசல்
காசிமுக்கு முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடத்திலிருந்து வாய்ப்பேச்சினால் வார்த்தைகள் மட்டுமே உதவிகள் கிடைத்தனவே
தவிர உறுதியான முடிவுக்குவர மு.கா. தலமைத்துவத்தாலோ அல்லது நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்ட மு.கா.
செயலாளர் ஹசனலியாலோ முடியாமல் போனது நிந்தவூர் மக்களின் துரதிக்ஷ்டவசமாகும். இதன் காரணத்தினாலேயே
அடுத்த நாளும் ஹர்த்தால் செய்ய வேண்டிய நிலை நிந்தவூர் மக்களுக்கு ஏற்பட்டது.
நிந்தவூர் மக்களுக்கோ எத்தனை நாளாவது ஹர்த்தால் போட்டாவது தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும்
என்ற நிலை,ஆனால் பொத்துவில், அக்கரைப்பற்று தொடக்கம் கல்முனை மட்டக்களப்பு பிரதான போக்குவரத்து
வீதி என்பதால் ஒரு நாள் ஹர்த்தால் போட்டால் போதும் என்பது அரச தரப்பில் கூறப்பட்ட நியாயம்.அதற்காக
ஹர்த்தாலை கைவிடச்சொல்லி பெருமளவிலான கலகமடக்கும் பொலிசாரைப் பயன்படுத்தி 21 பொதுமக்களையும்
அதிகமான துவிச் சக்கரவண்டிகள் மோட்டார் சைக்கில்கள் போன்றவைகளையும் கைப்பற்றி தடுப்புக்காவலில்
வைத்தனர்.
ஆனால் குழப்பம் ஏற்படக் காரணமாக இருந்த குற்றவாளிகளை அன்றையதினம் வரை சட்டத்தின் முன்
நிறுத்தாத பொலிசார் கைது செய்யப் பட்டு தடுப்புக்காவலிருந்தவர்களை ஊரின் அமைதிக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு
விளைவித்தவர்கள் எனக்குற்றம் சுமத்தப் பட்ட சந்தேக நபர்களாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.ஆனால் குழப்பம்
விளைவித்த குற்றவாளிகளை அன்றையதினம் வரை சட்டத்தின் முன் நிறுத்தாத பொலிசாரினால் ஒரு நாள் தாமததின்
பின் நீதிமன்றத்தில் நிறுத்திய 21 பேரினை விசாரித்த நீதி மன்றம் ஒருவர் சுயனினைவற்ற மன நோயாளி என்றும்
மேலும் ஆறுபேர் வீதியால் பயணித்த வெளியூர்ப் பயணிகள் என்றும் விடுதலை செய்யப் பட்டு ஏனைய பதினாங்கு
பேரும் மேலதிக விசாரணைக்காக தடுத்தும் வைக்கப் பட்டும் இருந்தனர்.
இச் சம்பவதிலிருந்து பொலீசார் நிந்தவூரை எப்படி துவம்சம் செதிருப்பினர் என்பதனை ஊகித்துக்
கொள்ளலாம்.மீண்டும் அடுத்த மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப் பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பதினாலுபேரும்
மீண்டும் நீதிமன்றத்தில் ஏற்றப்பட்டு காசுப்பிணையிலும் சரீரப் பிணையிலும் விடுதலை பெற்று வெளியே வந்துள்ளனர்.
ஆனால் குழப்பம் விளைவித்த குற்றவாளிகளை இன்றையதினம் வரை சட்டத்தின் முன் நிறுத்தாத பொலிசார் பொதுமக்கள்
மீது நியாயப் போக்கினை கடைப்பிடிக்கின்றனரா? அல்லது இந்த அரசுதான் மக்களினை நியாயமான ஜனநாயக வழியில்
நடத்துகின்றதா? அரசதரப்பினால் ஏற்படுத்தப் பட்ட இந்த அனியாயத்துக்கு அரசு கூறும் பதில் தான் என்ன? கிழக்கிலே
செறிந்து வாழும் முஸ்லீம்களுக்கு இந்த நிலை என்றால் ஏனைய பிரதேசத்தில் வாழுகின்ற முஸ்லிம்களின் பரிதாப
நிலையை பற்றி சொல்லவும் வேண்டுமா? முஸ்லீம் மக்களின் குரலாக ஒலிக்கின்ற கட்சியினர் என பறையடிப்பவர்கள்
இது விடயத்தில் எங்கே இருந்தனர். நாங்கள் ஆமையைப்போல் காதும் காதுமாக கடமையை செய்பவர்கள் ஒருமுட்டை
இட்டு ஊர் அலற கொக்கரிப்பவர்கள் அல்ல என்பவர்கள் தான் எங்கே போயிருந்தனர்.இது அவர்களின் தொப்புள் கொடி
உறவுக்கு நடந்த சம்பவமில்லயா?
கிழக்கில் கட்டியாக வாழும் முஸ்லிம்களின் நிலைமை தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் முகம்
கண்ட தெவணகல முஸ்லிம் மக்கள் நாங்கள் யாரையும் நம்பவும் இல்லை எதிர்பார்க்கவுமில்லை இறைவனுடைய
உதவிதான் எங்களுக்கு உண்டு என வெளிப்படையாகவே இலங்கை முஸ்லீம்களுக்கும் முஸ்லீம் கட்சிகளுக்கும்
தெளிவான பதிலை சொல்லிக் காட்டியுள்ளார்கள்.அதேபோல செயலிலும் காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
எனவே நான் எடுத்துக்காட்டிவந்த ஆதாரங்களின் அடிப்படையில் முஸ்லீம்களை பிரதிந்திப் படுத்தும் ஒரேகட்சி முஸ்லீம்
காங்கிரஸ் தான் என்பதனை மாபெரும் தலைவர் அக்ஷ்ரஃப் அவர்களால் முஸ்லீம்களுக்கு அரசியல் முகவரியை தேடிக்
கொடுத்ததுடன் போய்விட்டது. அந்தத் தலைவர் உண்டாக்கிவிட்ட மரத்தின் நிழலில் உட்காந்திருந்து பலனையும்
சொகுசையும் அனுபவித்து சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டு தலைவர் காட்டிய வழியில் பயணிக்கிறோம் என்று முளு
முஸ்லீம்களையும் முட்டாள்களாக்கி அரசியல் அனாததைகளாக்கிக் கொண்டிருக்கின்றார் இன்றைய மு.கா.தலைவர்
ரௌஃப் ஹகீமும் ஏனைய முஸ்லீம் பெயர்களைக் கொண்ட இதர கட்சித்தலைவர்களும்.
முஸ்லீம்களின் வாக்குகளைப்பெற்று கதிரையை பற்றிப் பிடிக்கும் முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்கள்
மீது அக்கறையோடு நடந்திருக்குமாக இருந்தால் இன்றுவரை வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற
காணிப்பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினை,சமூக அரசியல் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு தமிழ்த் தலைமைத்துடனோ
அல்லது அரசுடனோ பேசி ஒருமுடிவை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். நிச்சயமாக வடக்கு கிழக்கு மாகாணங்களைப்
பொறுத்த வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முடிந்தளவு பேசி தீர்வுகளை எட்டி இருக்கமுடியும். அவ்வாறு
நடைபெற்றிருந்தால் சகோதரதமிழ் மக்களும் பல நன்மைகளை பெற்றிருப்பர்.முஸ்லீம் மக்கள் மீதும் ஒரு நம்பிக்கை
ஏற்பட்டு எதிர்காலத்திலும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வுகளை எட்டிக்கொள்ள வாய்ப்பை
ஏற்படுத்தியிருக்கலாம்.
இலங்கையை பொறுத்தவரையில் ஆதிகாலம் தொட்டே முஸ்லீம்கள் நாட்டின் பொருளாதாரம்,
கல்வி,மருத்துவம் அரசியல் துறைகளிலும் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வந்திருப்பதனை பண்டைய மன்னர்
காலத்திலிருந்தே சரித்திரங்கள் சான்று பகர்கின்றன.முஸ்லீம்களைப் பொறுத்தவரையிலும் தங்களுடைய மார்க்கத்தினை
முடிந்தளவு பேணிப்பாதுகாபதிலும் முஸ்லீம்களால் தாம் வாழும் நாட்டிற்கு எந்தவித பங்கமுமோ பாதகமுமோ ஏற்படாமல்
வாழவேண்டும் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்கம் என்பது முஸ்லீம்களுக்காக மட்டும் வந்தது என்று யாராலும் சொல்ல
முடியாது.உலக மக்களுக்காக வந்ததுதான் இஸ்லாம்.இதில் எந்த ஒளிவு மறைப்பு எதுவுமில்லை. இஸ்லாத்தில்
கூறப்பட்ட விடயங்களை ஆராய்ந்து நடப்பதால் அவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது.ஆனால் இஸ்லாத்தில் கூறப்பட்ட
விடயங்களை ஏற்று எம்மைப் படைத்த இறைவன் ஒருவன் என்றும் அவனுக்கு இணையாக வேறு எவரையும் வணங்க
தகுதி இல்லை, இஸ்லாத்தை போதித்த முஹம்மது நபி என்பவர் கூட ஒரு தாயின் வயிற்றில் பிறந்த மகன்.அந்த
மனிதனும் இறைவனது தூதர் என ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒருவர் முஸ்லீமாக முடியும்.அதனை ஒப்புக்கொண்டு
அதன் வழி நடக்கின்ற இலங்கை முஸ்லீம்கள் தாங்கள் வாழும் நட்டின் கலாச்சார சீர்கேடுகளிலிருந்து விலகி வாழச்
சொல்வதனை எவ்வாறு சிங்களப் பேரினவாதிகள் தவறான வழியில் செல்வதாக கூற முடியும்.
இஸ்லாத்தில் வஞ்சகம்,மது,சூது,களவு,பொய்,காமம்,வட்டி,கொலை,கொள்ளை என்பன பாவச் செயல்
என சொல்வது பிழை என்றால் சரியானது எது என்று சொல்லவேண்டுமல்லவா? வழியால் செல்லும் வாலிபனையும்
வயோதிபர்களையும் இளுத்தெடுக்கும்படி உடை அணிந்து செல்வதும் தனது அழகினை அன்னிய ஆடவருக்கு வெளிப்படுத்துவது
தப்பு என்று சொல்வதும். உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை (ஹறாம்)தவிர்த்துக்கொள்ளச்
சொல்வதும் தப்பு என்றால் சிங்களப் பேரினவாதிகள் அவர்களுடய மார்க்கத்தில் சொல்லப்பட்டவைகளை வெளிப்படையாக
மதம் மாறி வரும் பௌத்த சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லட்டும்.அவர்களுடைய கொள்கையின் உண்மைத்தன்மையை
வெளிப்படுத்தட்டும்.பௌத்த மதத்தில் கூறப்பட்டதுபோல முதலில் பிக்குகள் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டட்டும்.
பௌத்த தர்மம் என்ற போர்வையினுள் குடிகொண்டிருக்கும் பிக்குகள் வேடம் தரித்த காம
வெறியர்களாகவும் ஓரினச் சேர்க்கை மன நோயாளிகளாகவும் சிங்களத் தீவிர வாதிகளாகவும் மத வெறியர்களாகவும்
குடிகாரர்களாகவும் இருக்கின்றவர்களை உண்மயான பௌத்த மகாசங்கத்தினர் அடையாளம் கண்டு இவர்களை இந்த
நிலையிலிருந்து வெளியேற்றாதவரை மற்ற மதத்தவர்களலும் பிற நாட்டவர்களாலும் பௌத்த மதத்திற்கு மட்டுமல்ல
இலங்கைத் திரு நாட்டிற்கும் அவப் பெயரும் தாழ்வையுமே பெற்றுக்கொள்ள முடியும். அமைதியான இலங்கையை
உருவாக்க வேண்டும் என்று நல்ல எண்ணம் கொண்ட யாராவது நினைப்பாதாகச் சொன்னால் முதலில் பௌத்த குருமார்
தான் இதனைச் செய்ய வேண்டும்.இதை நான் சுட்டிக் காட்டுவது பௌத்த மதத்தையிம் துறவிகளையும் கேவலப்
படுத்தவோ அன்றி அவமானப் படுத்தவோ இல்லை. நானறிந்த வரையில் பௌத்த மதம் இவ்வாறான நடவடிக்கைகளை
வெறுத்துள்ளதனை படித்திருக்கின்றேன்.அறிந்திருக்கின்றேன்.
ஆக ஒட்டு மொத்தத்தில் விருப்பமில்லாப் பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால்
பட்டாலும் குற்றம் என்பதுபோல இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களாகிய தமிழ் பேசும் மக்கள் நாடு கேட்டுப்
போராடுபவர்களாகவும் சிங்கள பௌத்தர்களை அளித்தொழிக்க வந்தவர்களாகவும் சித்தரிக்கப் பட்டு சீரளிக்கப் படுகின்றனர்.
நாங்கள் நாடு கேட்கவுமில்லை மற்றவர்களை அழிக்கவுமில்லை எங்களுடைய உரிமையைத்தான் கேட்கின்றோம்.
இது ஒருபுறமிருக்க அரசுடன் ஒட்டிக்கொண்டு ஜால்றா அடிக்கும் பொதுநலம் பேசும் அரசியல்
வாதிகள் கூட சிறுபான்மை இனமான தமிழ் முஸ்லிம் மக்களை சிக்கவைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக்
கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பெறச்செய்யும் திட்டத்திற்கு இழுத்துப் பார்த்தனர். பிரயோசனமற்ற
தெரிவுக்குழுவை நிராகரித்தது தமிழ் தலைமைத்துவம்.இந்த வாசல் அடைபட்டது என்று அடுத்த வாசல் வழியாக மீண்டும்
ஒரு முயற்சியில் அரச தரப்பு இறங்கியுள்ளது.ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் தனக்கேற்பட இருக்கும் நெருக்கடிக்கு
தப்பிக்க வடக்கு அபிவிருத்தி என்ற பெயரில் அடுத்த நாடகம் அரங்கேற்றுகின்றனர். இதிலும் தமிழ் மக்களால் அறுதிப்
பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா சகல தகுதிகளுடனும் பொருத்தங்களுடனும்
இருக்க அரசு வழக்கம்போல தனது காய் நகர்த்தலை மேற்கொள்கின்றது.
ஆளுனராக இராணுவ அதிகாரியை நியமித்த அரசு வடக்கு அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு
மக்களின் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் ஆணையைப்பெற்ற அதிகாரமுள்ள முதலமைச்சரை கேவலப்படுத்தவும்
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிராசையாக்கவும் வடக்கிலே செல்லாக்காசாக தமிழ் மக்கள் மத்தியில் அமைச்சராக
இருக்கும் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சருடன் இணைந்து வடக்கு அபிவிருத்திக்கு ஒத்துழைக்க முன்வருவதாக
அறிக்கை விடுக்கின்றார். சொந்தக் காலில் நிற்க திராணியற்ற தமது மக்களின் நலன்பேணலில் சோரம் போன அரசியல்
வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் கட்சிக்காரர், மக்களுக்காக அரசியல் செய்து முதிர்ச்சி பெற்ற அரசியல் சாணக்கியத்
தலைமைத்துவத்தை பாராளுமன்ற குளுவுக்கு கூப்பிடுவது அரசியல் கண்ணோட்டத்தில் எவ்வாறு பார்க்கப் படவேண்டிய
ஒன்றாக பொதுமக்கள்தான் யோசிக்க வேண்டும்.
கடந்தவரம் ஒத்திப் போடப்பட்ட கல்முனை மாநகரசபை வரவு செலவுத்திட்டம் மீண்டும் டிசம்பர் 31ல்
வாக்கெடுப்புக்கு விட்டு வெற்றி பெறுவதற்காக அவசரமாக சமரசம்பேச மு.கா.தலைமைகள் கல்முனைக்கு பறந்துவந்தன.
சமரசம் பேசின. வாக்கெடுப்பில் த.தே.கூ.உறுப்ப்பினர்கள் கலந்துகொள்ளாது எதிர்ப்பின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்
பட்டது. தொடர்ந்து 5ஆம் கிராமம் மத்தியமுகாம் சென்ற மு.கா குளுவினர் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரை
கட்சியிலிருந்து உடனடியாக இடை நிறுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது கட்டாயம் காங்கிரஸ் தலைமைத் துவங்களால் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால்
பதவிக்காகவும் சொகுசுக்காகவும் பேரம்பேசி உழைத்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய கதிரைகளை காப்பாற்றிக்
கொள்ளவும் தேவையானதுதான்.நிந்தவூர் மக்கள் கேட்பாரில்லாது நாதியற்று நின்றபோது தெவணகல முஸ்லீம்கள்
உதவிகேட்டு கூக்குரலிட்டபோது பள்ளிவாசல்கள் உடைக்கபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு
காதும் கேட்காது கண்ணும் பார்வையற்று இரத்தக் கொதிப்பு அடங்கிப் போயிருக்கும். அதற்காக நேரத்தை ஒதுக்கி
அப்படியன பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நேரமும் இருக்காது அவசியமும் இல்லை.
ஆனால் தேர்தல் வரும்போது வாக்களிக்க மட்டும் முஸ்லீம்கள் என்றும் இஸ்லாம் என்றும்
தனித்துவம் என்றும் சாதி என்றும் மதம் என்றும் பிரதேசம் என்றும் வாய்கிளியக்கத்தி வீரமுழக்கம் முழங்குவர்.மு.கா.
தலைவர் தனது ஏதோ சொந்த தேவைக்காக மலேசியாவிலிருக்கும் போது இங்கு பத்திரிகையில் முகம்மது நபியின்
படம் பிரசுரித்திருப்பதாக சொன்னதால் ஒரு கண்டண அறிக்கை விட்டிருந்தார்.அது ஒரு சாதனை என்று ஊடகங்களில்
பெரிதாக பில்டப் பண்ணிக்காட்டினர்.இதேவேளை உள் நாட்டில இருந்திருந்தால் அதுவும் நடந்திருக்க மாட்டாது.எனவே
காலம் காலமாக சிறுபான்மையினர் பாதிக்கப் படும்போது அல்லது தாக்குதலுக்குள்ளாகும் போது ஒவ்வோரு சந்தர்ப்பங்களிலும்
முஸ்லிம் தலைமைத்துவத்தை விமர்சிப்பதும் வெறுப்பதும் வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது. அன்னல் எமது
சந்ததி சார்ந்த முடிவுகளை எமது சமூகம் எடுக்கவேண்டுமாக இருந்தால் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது
சிந்தித்து வித்தியாசமான முடிவெடுப்பதே ஆரோக்கியமுள்ளதாக இருக்கும்.
த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முஸ்லிம் வேட்பாளரும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்
பிரதினிதியுமான துவான் புனைட்
தொலை பேசிகள்:- 0772382645 /06472498 /0725010097