அரசையும், முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம்கள் நிராகரிக்கிறார்கள் என்ற செய்தியை கடந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் மூலம் நாட்டுக்கு முஸ்லிம்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்; என முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் 75 வீதமான முஸ்லிம்கள் பள்ளிவாயல்களை தகர்க்கும் அரசுக்கும், அதற்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எதிராக வாக்களித்துள்ளமை உலமா கட்சியின் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகும். நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான கட்சிகளை நிராகரித்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தனது அமைச்சுப்பதவி, மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என படையெடுத்தும் கடந்த மாகாண சபையில் இருந்த ஒரேயொரு உறுப்பினரையே மீண்டும் பெற்றுள்ளமை இந்த நான்கு வருடங்களுள் அக்கட்சி கொழும்பில் வளர்ச்சியை அடையவில்லை என்பதையே காட்டுகிறது.
அதே போல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ. இ. மக்கள் காங்கிரசுக்கும் ஏற்கனவே மாகாண சபை உறுப்பினராக இருந்தவரே வெற்றி பெற்றதன் மூலம் அக்கட்சிக்கென எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும். மேற்படி உறுப்பினர் அமைச்சரோ பாராளுமன்ற உறுப்பினரோ இல்லாத கட்சியில் போட்டியிட்டு ஏலவே உறுப்பினராக இருந்தவர். இவரை மட்டுமே இக்கட்சி வெல்ல வைத்ததன் மூலம் தடியால் வீழ்த்த வேண்டியதை கோடிக்கணக்கில் செலவு செய்து பீரங்கியால் வீழ்த்தியுள்ளார்கள். பிரபா கனேசனை துணைக்கழைத்தும் இவர்களுக்கென ஒருவரை வெல்ல வை;க முடியவில்லை.
இந்தத்தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை கவர முஸ்லிம் காங்கிரஸ் பல நாடகங்களை அரங்கேற்றியும் கூட இந்தத்தந்திரங்கள் முஸ்லிம் மக்களிடம் பலிக்கவில்லை. பள்ளிவாயல் உடைப்பு, ஹலால் ஒழிப்பு என தொடரும் அநியாயங்களுக்கெதிராக நமது வாக்குப்பலத்தை காட்ட வேண்டும் என்றால் இன்றைய நிலையில் ஐ தே கவுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற எமது பிரச்சாரத்துக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது. முஸ்லிம் கட்சிகளை தனித்து களமிறக்கி முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்க நினைத்தவர்கள் ஏமாந்து போயுள்ளனர்.
அதே வேளை அமைச்சராக இல்லாத நிலையில் தமிழ் மக்களின் குரலாக இருக்கும் மனோ கனேசனின் வெற்றி முஸ்லிம் மக்களுக்கு பாரிய படிப்பினையாகும். அமைச்சர்களாக இருப்பவர்களின் கட்சிகளால் சமூகத்துக்கு சுதந்திரமாக குரல் கொடுக்க முடியாது என்பதை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் நிரூபித்துள்ளார்கள். இதனை ஒரு பாடமாகக்கொண்டு அமைச்சர்கள் தலைமையில் இல்லாத, சமூகத்துக்காக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் முஸ்லிம் கட்சியை பலப்;படுத்த முஸ்லிம்கள் ஓரணியில் திரள்வதன் மூலம் பல விடயங்களை இறைவனுதவியால் சாதிக்க முடியும்.