கல்முனை
ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை AIMS நிறுவனத்தின் கல்வி
அபிவிருத்தி. பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது. இன் நிகழ்வு நிறுவளத்தின் உப தலைவர் M.I.M. தில்சான் தலைமையில் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நேற்று (17.04.2014) நடைபெற்றது. கடந்த வருடம் க.பொ.த. சா/த பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி விசேட சித்தியடைந்த 7 மாணவர்களும், 8 பாடங்களில் அதி விசேட சித்தியடைந்த 10 மாணவர்களும் மொத்தமாக 17 மாணவர்கள் இன் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
தகவல்
– எஸ். ஸஜாத் முஹம்மத்

