BREAKING NEWS

பொது பலசேனா ஊடகங்கள் முன்பாக வைத்துள்ள மூன்று குற்றச்சாட்டுக்கள்:

பொது பலசேனா ஊடகங்கள் முன்பாக வைத்துள்ள மூன்று குற்றச்சாட்டுக்கள்:
1. அடுத்தவர்களின் காணிகளில் அத்துமீறி குடியேறுங்கள், அடுத்தவர் சொத்துக்களை அபகரியுங்கள் என குர்ஆன் சொல்கிறது என்ற குற்றச்சாட்டு.
இதற்கு நிச்சயம் உலமா சபை பகிரங்கமாக பதில் தர வேண்டும். உலமா சபை பதில் தராவிட்டால் உலமா கட்சி அதற்குரிய பதிலை தரவேண்டும்.
2. ரிசாத் பதியுதீன் வில்பத்துவில் முஸ்லிம்களை அத்துமீறி குடியேற்றுகிறார் என்ற குற்றச்சாட்டு. இதற்கு ரிசாத் பகிரங்க ஊடக மாநாட்டை நடத்தி பதில் தரவேண்டும்.
3. பொதுபலசேனாவின் ஒழுக்கத்தை கண்டிக்க ரஊப் ஹக்கீமுக்கு தகுதியில்லை என்ற குற்றச்சாட்டு. அவர் குமாரியை கெடுத்து அவளை தீயிலிட்டவர் என்பதால்.  இதற்குரிய பதிலை முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக தர வேண்டும். அல்லது ஒழுக்கம் கெட்ட தலைவரை நீக்கிவிட்டு இதோ ஒழுக்கம் கெட்ட தலைவரை நாம் நீக்கி விட்டோம், ஒழுக்கமில்லாத ஞான சேகரை நீங்கள் நீக்குங்கள் என பொது பல சேனாவுக்கு சொல்ல வேண்டும். இவை நடக்குமா என்பதுதான் மக்களின் இன்றைய எதிர் பார்ப்பு.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar