BREAKING NEWS

நீர்கொழும்பு-அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி

நீர்கொழும்பு-அல்-ஹிலால் மத்திய கல்லூரியின்  ஆரம்பப் பிரிவு   மாணவர்களின் கல்விக் கண்காட்சி (22) வியாழக்கிழமை மற்றும் (23) வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதிகள் மண்டபத்துக்கு'அழைத்து வரப்படுவதையும், கண்காட்சி திறந்து வைக்கப்படுவதையும், கல்லூரி  அதிபர் எம். எம் .எம் கஸ்ஸாலி, நீர்கொழும்பு கல்வி வலய ஆரம்பப்  பிரிவு கல்வி அதிகாரி கே. ஏ .எஸ். ஹேமச்சந்திர, பிரதிக் கல்விப்  பணிப்பாளர் பீ.சீ .பி. பெர்னாந்து, உள்ளிட்ட பிரமுகர்கள் கண்காட்சியைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், இக் கண்காட்சி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar