எந்தவொரு மத்தினையும் நம்பிக்கையையும் எவரும் நிந்தனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அண்மைக்காலமாக இஸ்லாம் மதத்தினை புத்த பிக்குகள் உட்பட சிலர் நிந்தித்து வருகின்றனர். இதேவேளை 2013ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ராஸிக் என்பவர் பௌத்த மத்தினையும் புத்த பெருமானையும் நிந்திக்கும் விதமாக கருத்துத் தெரிவித்து, யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதுபோன்ற மத நிந்தனை விடயங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இலங்கை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“மதங்களை நிந்திக்கும் விதத்தில் நடந்து கொள்கின்ற தனி நபர்களையும் குழுக்களையும் சட்டப்படி தண்டிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.
இஸ்லாம் மார்க்கமானது பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்துகிறது. எந்தவொரு மத்தினரையும் நிந்திப்பதற்கு இஸ்லாம் இடமளிக்கவில்லை.
இலங்கை ஒரு பல்லின நாடு என்ற வகையில் இங்கு பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அனைத்து மதத்தினரும் பரஸ்பர மரியாதை மற்றும் கலாசார விழுமியங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே இதனை மீறிச்செயற்படுவோர் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
இது விடயத்தில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துவதோடு, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்போரை உடனடியாக கைதுசெய்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம்” என கோரியுள்ள