BREAKING NEWS

தம்புள்ள பள்ளி விவகாரத்தில் முஸ்லிம் எம்பீக்கள் சமூகத்தை ஏமாற்றி விட்டார்கள்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் தம்புள்ள பள்ளிவாயல் அகற்றப்படுவது உதியானதன் மூலம் அமைச்சர்களினதும் எம்பீக்களினதும் கையாலாகாதனம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளதுடன்
இந்த விவகாரம் ஓர் உதாரணமாக கொள்ளப்பட்டு பல பள்ளிவாயல்கள் அகற்றப்படும் நிலை ஏற்படும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,

இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான அநியாயம் தம்புள்ள பள்ளி விவகாரத்திலேயே ஆரம்பித்தது. பள்ளிவாயலை எப்படியும் அகற்றுவது என்பதில் அரசிடம் உறுதியை கண்ட நாம் இது பற்றி கடுமையாக கண்டித்ததோடு ஐ நாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட உலமா சபை இதனை கண்டித்து பகிரங்கமாக கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என கூறினோம். இந்த அறிக்கையை வாபஸ் வாங்க வேண்டும் என்ற ஜனாதிபதி செயலகத்தின் கூற்றை நாம் மறுத்ததுடன் பள்ளியை தாக்கியவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்ற காரணத்தால் உலமா கட்சி அரச ஆதரவிலிருந்து விலகியது.

ஆனால் முஸ்லிம்களின் உரிமைக்கட்சிகள் என சொல்லிக்கொள்ளும் ஹக்கீம், ரிசாத் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு முட்டுக்கொடுத்ததுடன் அரசில் இருப்பதனூடாக இதனை தீர்க்க முடியும் என கூறி மக்களை ஏமாற்றினர். தம்புள்ள பள்ளிவாயலை அகற்றுவதற்குரிய முயற்சிகள் மெது மெதுவாக முன்னெடுக்கப்பட்ட போது அது பற்றி அப்பள்ளி நிர்வாகம் முஸ்லிம் அமைச்சர்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியதுடன் இது விடயத்தில் தலையிடும்படி முஸ்லிம் அமைச்சர்களை கெஞ்சியது. ஆனால் அமைச்சர்கள் தம்புள்ள பள்ளியை வைத்து முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதிலேயே கண்ணாய் இருந்தனர்.

கடைசியில் பௌத்த மதகுரு சகிதம் புல்டோசர்களும் தம்புள்ள பள்;ளிவாயலை சுற்றிவளைத்த போது பள்ளி உடைக்கப்பட இடமளியேன் என்றும்  அதற்கெதிராக தான் வழக்கு போடப்போவதாகவும் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அறிக்கை விட்டார். தான் ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் பள்ளி அகற்றப்படமாட்டாது என்றும் ஹக்கீமமு; ரிசாதும் வழமை போல் ஊடகங்களுக்கு வீறாப்பாய் அறிக்கை விட்டனர். அதேபோல் நாமும் சும்மா இருப்பதா என பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீசும், தவ்பீக்கும் தம்புள்ளைக்கு சுற்றுலா சென்றதுடன் பெசில் ராஜபக்ச பள்ளியை அகற்ற இடம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும், பௌத்த மதகுருக்கெதிராக வழக்கு போடப்போவதாக கூறியுள்ளதாகவும் தமது பாட்டுக்கு அறிக்கை விட்டு தோளை நிமிர்த்தினர்.  கடைசியல் பள்ளி அகற்றப்படுவது மட்டுமே உறுதியானதுடன் முஸ்லிம் எம்பீக்கள் பொய்களை சொல்லி முஸ்லிம்களை முட்டாளாக்கி தாமும் முட்டாள்களானது மட்டும்தான் தெரிய வந்தது.

இது விடயத்தில் பள்ளிவாயல் நிர்வாகத்தை குறை கூற முடியாது. அரசியல் அதிகாரமற்ற அவர்கள் அரசின் புல்டோசர்கள் முன்னால் சரணடைவது தவிர அவர்களால் வேறு முடியாது. ஆனாலும் இது ஓர் உதாரணமாக கொள்ளப்பட்டு நகர அபிவிருத்தி என் பெயரில் பல பள்ளிவாயல்கள் அகதியாக்கப்படலாம் என்பது உறுதியாக தெரிகிறது. இதனை தவிர்ப்பதாயின் பதவிகளுக்கு சோரம் போன முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கெதிராகவும் முஸ்லிம்கள் ஜனநாய ரீதியலான  தமது  எதிர்ப்பை பகிரங்கமாகக்காட்ட முன்வரவேண்டும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar