சட்டம், ஒழுங்கு தொடர்பில் ஜனாதிபதி க்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனை சபையொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒழுக்கக் கட்டுப்பாடுள்ள சட்டத்தை பின்பற்றும் சமூகமொன்றை உருவாக்கு வதற்காக கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தயாரிப்பதற்கு தேவையான ஆலோசனை களை இந்த சபை வழங்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
மத விவகாரங்கள் தொடர்பில் தனியான பொலிஸ் குழு நியமிக்கப்பட்ட போது சில தரப்பு அதனை எதிர்த்தது. சந்தேகநபர்கள் சிலர் பொலிஸ் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் உள்ளன. இவற்றையும் கருத்திற்கொண்டே சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த சபை உருவாக்கப்பட்டுள்ளது.