மூன்று செயல் நுணுக்க கருத்திட்டங்கள் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்து கொள்ளாமையானது அந்தக் கட்சியின் ஓர் அரசியல் நாடகமே தவிர, சமூகம் சார்ந்த செயற்பாடு அல்ல என
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டமூலத்தில் கசினோ இடம்பெற்றிருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அப்படி கசினோவும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக ஏன் முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சட்டமூலத்தில் கசினோ உள்ளடக்கப்பட்டிருந்தால் நான் ஆளுந்தரப்பு பிரதி அமைச்சராகவிருந்தாலும் அதற்கு எதிராகவே வாக்களித்திருப்பேன்.
அவுஸ்திரேலியாவின் கசினோ மன்னரான ஜேம்ஸ் பெக்கரை உள்வாங்குவதன் மூலமுமே இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பேண முடியுமென நான் கூறியதாக பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை.
அவுஸ்திரேலியாவின் கசினோ மன்னரான ஜேம்ஸ் பெக்கரை உள்வாங்குவதன் மூலமுமே இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பேண முடியுமென நான் கூறியதாக பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை.
மூன்று செயல் நுணுக்க கருத்திட்டங்கள் தொடர்பான சட்டமூலம் குறித்து எதிர்க் கட்சியினர் முன்னெடுத்துள்ள தவறான பிரசாரங்கள் காரணமாக இலங்கையின் முதலீட்டில் தற்போது சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. முதலீட்டு விடயத்தில் அரசாங்கத்தின் கருத்துகளை மட்டும் முதலீட்டாளர்கள் செவிமடுப்பதில்லை. எதிர்க் கட்சியினரினதும் கருத்துகளையும் அவர்கள் உள்வாங்கியே முதலீடு தொடர்பில் கவனஞ் செலுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளினால் முதலீடு செய்வோர் அதனை நிறுத்தாவிடினும் தடைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
