BREAKING NEWS

எந்த பள்ளிவாசலுக்கு செல்வதற்கும் எனக்கு தடை விதிக்க முடியாது


எந்த பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு எனக்கு தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.

தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய காமினி ஜெயவிக்ரம பெரேரா, கெசினோ சூதாட்ட சட்டத்துக்கு அஸ்வர் எம்.பி. ஆதரவு வழங்கியதாகவும் அவருக்கு பள்ளிவாசல்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த அஸ்வர் எம்.பி., அவ்வாறு எந்த பள்ளிவாசலும் தடை விதிக்கவில்லை எனவும் அவருக்கே (காமினி ஜெயவிக்ரம பெரேரா) பன்சலைகளுக்கு செல்ல தடை உள்ளதாக தெரிவித்தார்.
இஸ்லாத்துக்கு எதிராக அவர் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்த அஸ்வர் எம்.பி., சபையில் தவறான கருத்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar