BREAKING NEWS

தம்புள்ள பள்ளிவாசலை அகற்றிச் செல்வதற்கு நிர்வாகம் இணக்கம்;



dambulla-mosque01
தம்புள்ளை கைரியா ஜும்ஆ பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் அப்பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகர சபையின் தம்புள்ளை நக
ர பணிப்பாளர் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இன்று மாலை கண்டியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கத்தை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி பள்ளிவாசலை வேறொரு இடத்தில் புதிதாக நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைியனால் நான்கு இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளது என்றும் அவற்றில் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தெரிவு செய்யப்படும் ஒரு இடத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள முடியும் என்றும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தையில் மாத்தளை மேயர் ஹில்மி கரீம்,,தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபத்த உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
தம்புள்ளை பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வீதி அபிவிருத்திப் பணிகளின் பொருட்டு நேற்று முன்தினம் தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் சகிதம் பள்ளிவாசலை உடைத்து அகற்றுவதற்கு முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தோன்றியதைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து பள்ளிவாசலை அகற்றுவதைத் தவிர வேறு வழி கிடையாது என்று நகர அபிவிருத்தி அதிகர சபை அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar