BREAKING NEWS

சிப்லி பாறூக் எடுத்துக் கொண்ட முயற்சி. 1990ம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கட்டவர்களின் உடல்கள் தோண்டப்படவுள்ளன.

photo 2

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் எடுத்துக் கொண்ட  முயற்சியினால் 1990ம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கட்டவர்களின் உடல்கள்தோண்டப்படவுள்ளன.

காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை சூழவுள்ள கிராமங்களில் இருந்து காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை திரட்டி அதனை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஒப்படைத்திருந்தார்..
இதில் 112 முறைப்பாடுகள் ஒப்படைக்கப்பட்டது.இதன் போது ஆணைக்குழுவின் தலைவர் அவர்களிடம் 03 வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டன.
01. 1990 ஜூலை 12ம் திகதி குருக்கல்மடத்தில் வைத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் அந்த புதை குழியை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுதல்.
02. அவ்வாறு காணாமல் போனோர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்.
03. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி சம்பந்தமான ஓர் உத்தியோகபூர்வ ஆவணத்தை வழங்குதல்.
இதனடிப்படையில் மார்ச் 22ம் திகதி காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த போது முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன் ஆணைக்குழுவினரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் குருக்கல்மடத்திற்கு அழைத்துச் சென்று புதைக்கப்பட்டிருக்கும் இடம் அடையலாம் காட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக பொலிஸ்மா அதிபருக்கு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கான அறிவுறுத்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பியிருந்தார்.
அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களை தொடர்புகொண்ட காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் அவர்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனோரின் உறவினர் ஒருவரை முறைப்பாடு செய்யுமாறு கேட்டிருந்தார்.இதனடிப்படையில் காணாமல் போன உறவினர் ஒருவரால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.
அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் கேட்டுக்கொண்டதட்கிணங்க ஜூன் மாதம் 6இ7 ம் திகதி விசேடமாக காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடிக்கு விஜயம் செய்து விசாரணை செய்தது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக குருக்கல்மடம் புதை குழியை தோண்டுவதட்கான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரை கேட்டதற்கு இணங்க ஏற்கனவே காத்தான்குடியில் இருந்து காணாமல் போனோருடைய உறவினர் ஒருவர் செய்த முறைப்பாட்டை மேற்கோள்காட்டி இந்த புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்ற ஆணை 23.06.2014 அன்று பிறப்பிக்கப்பட்டது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar