(அஸ்ரப் ஏ சமத்)
அளுத்கம தர்கா நகர் பேருவளை சம்பவத்திற்காக ஒரு ஆதாரமாக இடதுசாரி பத்திரிகையான “அத்த” என்ற சிங்கள வாரயிறுதி பத்திரிகை
ஒரு முக்கியமானவரது புகைப்படத்தை பிரசுரித்துள்ளது. அதில் குறிப்பிட்ட நபர் 2 மாதங்களுக்கு முன்பு மத்தளை விமான நிலையத்தை பார்வையிடச் சென்ற ஜ.தே.கட்சி எம்பிமார்களுக்கு தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு கல்வீசுவதையும். மற்றைய படத்தில் அவர் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானதேரர் நடாத்திய அளுத்கம கூட்டத்தில் அவர் முன்நின்று கைகூப்பி கும்பிட்டுக்கொண்டு நிற்பதை பிரசுரித்துள்ளது.