BREAKING NEWS

பாதாள கோஷ்டியுடன் முஸ்லிம் அமைச்சருக்கு தொடர்பு; அம்பாறை, திருமலையிலும் பாதாளக் குழுக்கள் உள்ளதாம்!

palankade-heena

‘பண்டா குரூப்” எனப்படும் பாதாள உலக குழுவுடன் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை புலனாய்வு சேவையில் கடமையாற்றிய முஸ்லிம் நபர் ஒருவர் ‘இலங்கை இஸ்லாமிய போராளிகள்” என்ற பெயரில் அமெரிக்க இராஜங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே இத்தகவலை குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பண்டா குரூப் எனப்படும் பாதாள உலக குழுவுடன் முஸ்லிம் அமைச்சருக்கு தொடர்பு உள்ளதாகவும் குறித்த குழுவுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொழும்பு மாளிகாவத்தையில் நான்கு பாதாள குழுக்களும், அம்பாறையில் முஜைதீன் என்ற குழுவும் திருகோணமலையில் ஒசாமா என்ற குழுவும் இயங்குவதாகவும் அக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar