BREAKING NEWS

சாத்தான் வேதம் ஓதுகிறது. - தேசிய ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் தடையேற்பட மதவாதமாக செயற்படும் சிறு குழுவினரே காரணம்


இடமளிக்க முடியாது - பொதுபலசேனா முன்னாள் தலைவர்
அளுத்கம சம்பவமே இறுதியானதாக இருக்க வேண்டும். நாட்டில் இதுபோன்ற இனியொரு சம்பவம் இடம்பெற அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது. இத்தகைய சம்பவங்கள் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியவாதிகள் எமது நாட்டின் மீது அழுத்தம் செலுத்து வதற்கே துணையாக அமையுமென தெஹிவளை - நெதிமால பெளத்த கலாசார நிலையத்தின் அதிபர் கிரம விமலஜோதி தேரர் கூறியுள்ளார்
.
சாசனம், சம்புத்த ஜயந்தி மன்றத்தின் வேலைப்பளு காரணமாக தாம் பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் இருந்து கடந்த எட்டு மாதங்களாக விலகி இருப்பதாகவும் வேகமான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் சக வாழ்வை சீர்குலைக்க மதவாதிகளுக்கு செயற்பட இடமளிக்க முடியாதென்றும் தேரர் தெரிவித்தார்.
2500 ஆண்டுகளுக்கும் மேல் எழுத்து மூல வரலாறு கொண்ட பெளத்தர்கள் வாழும் ஒரே நாடு இலங்கையாகும். சகல இனத்தவரும் ஐக்கியமாகவும், சக வாழ்விலும் ஈடுபட்டுள்ளனர். மதவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிறு குழுவினர் காரணமாக தேசிய ஒற்றுமைக்கும் சக வாழ்வுக்கும் தடை ஏற்பட ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அளுத்கமை பகுதியில் நடந்த சம்பவங்களின்போது பல அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து செயற்பட்ட முறையை நான் அனுமதிக்கமாட்டேன்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar