BREAKING NEWS

போலிச்சாயம் வெளுக்கிறது. அமைச்சரவையில் ரிசாத் ஜனாதிபதி வாக்குவாததம் பொய்யாம்.

அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அரசியல் அந்தஸ்தை தக்க வைக்க போலிப் பிரசாரம் என்கிறது ஜனாதிபதி தரப்பு!

Rizath (2)
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்போக்குடன் நடந்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று அறிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மக்கள் மத்தியில் அரசியல் அந்தஸ்தை தக்க வைத்து கொள்வதற்காக இவ்வாறான போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் இது தொடர்பில் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
“அண்மையில் அளுத்கம, சம்பவம் தொடர்பாக ஆராயப்பட்ட விடயங்கள் சில தமிழ் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
அளுத்கம சம்பவம் தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோதும், ஊடகங்களில் உள்ளபடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்போக்குடன் நடந்து கொள்ளவில்லை.
இவ்வாறான பொறுப்பற்ற முறையிலான செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஜனாதிபதியையும் அரசையும் இனவாத கோணத்தில் சித்தரிக்க முயற்சிக்கப்படுகிறது.
அளுத்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, அவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வழிவகைகள் குறித்து அரசு முழுமையான கவனம் செலுத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில் ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அளுத்கம சம்பவத்தை அடிப்படையாக வைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அரசியல் அந்தஸ்தை தக்கவைத்து கொள்வதற்கு பல ஊடக உபாயங்களை கையாண்டாலும் அது நாட்டுக்கும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விடக் கூடாது என்றும் தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கும் அமைச்சர் றிசாத்துக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி கடும்போக்குடன் நடந்து கொண்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar