மூவின மக்களின் ஒற்றுமைக்கு முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக மத்தியமுகாம் நகரத்தை பார்க்கின்றேன். கடந்த யுத்தகாலத்தில் கூட இப்பிரதேசத்தில் வாழும் இனங்களிடையே எந்தவித பிரச்சினைகளும் வந்ததாக நான் அறியவில்லை.
இவ்வாறு மத்தியமுகாம் நகரில் அமைந்துள்ள லும்பினி விகாரையில் இன்று (12) இடம்பெற்ற பொசன் பௌர்ணமி தின விருந்துபசார நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தும் நோக்குடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகல் போசனத்தில் கலந்து கொண்டனர்.